கம்பராமாயணம் 2363 · அயோத்தியா 10.45

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ் அயோத்தி மாநகர் - அந்த அயோத்தி மா நகரமானது; அறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா - அறிவான் அமைந்த பெரியோர் முதல் சிறியவர் வரை (அனைவரும்); செறி பெருந் தானையும் - நெருங்கியுள்ள பெரிய சேனையும்; திருவும் - செல்வமகளும்; நீங்கலால் - நீங்கிக் காடு நோக்கிச் சென்றுவிட்டபடியால், குறியவன் - அகத்திய முனிவன்; புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் - (தனிநீரை யெல்லாம் வயிற்றில் அடக்கிய அந்நாளில்; மறிகடல் ஒத்தது - அலைவீசும் கடல் வறிதானாற் போன்றது.

வெறுமை அடைந்த அயோத்திக்கு அகத்தியர் உண்ட கடல் உவமையாயிற்று. “அறந்துறந்து ஈட்டுவார்தம் அருள்பெற்ற செல்வம் போல, வறந்தன படுநீர்ப் பெளவம்” என்பதனால் (திருவிளை. மதுரைக். இந்திரன்பழி. 54) அகத்தியர் உண்ட கடலின் இயல்பினை அறிக. இதுகாறும் சேனை என்று கூறினாரேனும், அயோத்தி நகர ஆடவர் மகளிர் அனைவரையும் உள்ளடக்கியே அவ்வாறு கூறிச் செல்கின்றார் என்பதைக் கவிப் போக்கால் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since the wise and the humble, from first to last,
  2. the close-packed great army and Fortune herself had all departed,
  3. it was like the tossing ocean on the day the short sage
  4. took all its water into his belly — that great city of Ayōttī.

What the poem says

With everyone gone, from the learned elders down to the smallest child, along with the army and the goddess of prosperity herself, Ayōttī stands empty.

The poet compares the deserted city to the ocean on the day Akattiyaṉ, the sage of short stature, drank it dry: a vast basin with nothing left in it. The verse also makes clear that the "army" of the earlier verses includes the whole population of the city, men and women alike.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟiñarum ciṟiyarum āti antamā
ceṟi perun tāṉaiyum tiruvum nīṅkalāl,
kuṟiyavaṉ puṉal elām vayiṟṟil koṇṭanāḷ,
maṟikaṭal ottatu av ayōtti mānakar.