கம்பராமாயணம் 2364 · அயோத்தியா 10.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அப்படை செல் ஆறு - அந்தப் படைகள் செல்கின்ற வழி; பெருந்திரை நதிகளும் - பேரலைகளைக் கொண்ட நதிகளும்; வயலும் -; பெட்புறு - விரும்புதல் அமைந்த; மரங்களும் -; மலைகளும் -; மண்ணும் -; கண்ணுற - பக்கங்களில் கட் புலனாகத் தோன்ற, (அதனால்); அயோத்தி ஆம் தெய்வ மா நகர் - அயோத்தியாகிய தெய்வத் தன்மை வாய்ந்த பெரு நகரத்தின்; திருந்தல் இல் அருந்தெரு ஒத்தது - திருத்தமற்ற அரிய தெருவைப் போன்றது.
படைகள் செல்கின்ற வழியில் நதி, வயல், மரம், மலை, மண் காணப்படுவதால் 'திருந்தல் இல் தெரு' என்று உவமைப்படுத்தினர். படைகள் வீதியில் செல்வது வழக்கமாதலின் படைகள் செல்கின்ற இடத்தை வீதி போன்றது என்றார். மேற்செய்யுளில் அயோத்தி நகர் வெறுமையானதைக் காட்டியது. இது படைசெல்லும் இடம் அயோத்தி நகரத் தெருப் போல மக்கள் கூட்டம் நிரம்பிவழிவதாயிற்று என்கிறது. 'அரோ' அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With rivers of great waves, with fields, with pleasant
- trees, with hills and open earth all in view on either side,
- it was like an unpaved street of that divine great city,
- Ayōttī — the road along which that army went.
What the poem says
The previous verse showed Ayōttī emptied. Here the opposite picture: the road the army travels is so packed with people that it looks like one of the city's own streets.
The only difference is that this street is "unfinished": instead of houses along its sides, there are rivers, fields, trees, hills and bare earth.