கம்பராமாயணம் 2365 · அயோத்தியா 10.47

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' --
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தார்கள் தாம் , கோதை தாம் , தாமம் , தாம் , தகை
ஏர் கடாம் , கலவை தாம் , கமழ்ந்தின்று ' என்பர் ஆல்--
கார்கள் தாம் என மிகக் கடுத்த கை மலை
வார் கடாம் அல்லது , அம்மன்னன் சேனையே .

பொருள் · Meaning in Tamil

அம் மன்னன் சேனை - (அந்தப்) பரதன் ஏவிய சேனையில்; கார்கள்தாம் என - மேகங்களே என்று சொல்லும்படி; மிகக் கடுத்த கைம்மலை - மிகவும் பொருந்த அமைந்த யானைகள்; வார்கடாம் அல்லது - பெருகவிடும் மதசலம் அல்லது; “தார்கள் தாம், கோதை தாம், தாமம் தாம், ஏர்கள் தாம், கலவை தாம் - தார், கோதை, தாமம், பல்வகைச் சிறப்பான அழகுப்பொருள்கள், கலவைச் சாந்து (இவற்றின்); கமழ்ந்தின்று” - மணம் வீசப் பெறவில்லை; என்பர் - என்று சொல்லுவர்.

தார் முதலிய அணியாமையின் அவற்றின் மணம் இல்லை என்றார். தார் - நெடுக ஆடவர் அணியும் மாலை, கோதை - மகளிர் தலையிற் சூடும் மாலை, தாமம் - வட்டமாலை என இவை மாலைவிசேடங்கள். ஒரோவழிப் பொதுப் பெயராகவும் இவை வழங்கும். கடுத்த என்பதை உவமைச் சொல்லாக்குக - கோபித்த யானை என்பதும் ஒன்று. 'ஏ' காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Of garlands, of flower-wreaths, of chaplets, of fine
  2. adornments, of mixed sandal paste, there was no fragrance,' they say —
  3. nothing but the streaming must of the mountain-like elephants,
  4. dark as rain clouds, in that king's army.

What the poem says

No one in the army wears garlands, flowers or sandal paste, because they are in mourning, so none of the usual perfumes hang over the march. The only smell is the must flowing from the bull elephants, which look like dark rain clouds.

Three kinds of garland are named: the long garland worn by men, the wreath women wear in their hair, and the round chaplet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tārkaḷ tām, kōtaitām, tāmamtām, takai
ērkaḷtām, kalavai tām, kamaḻntiṉṟu ' eṉparāl --
kārkaḷtām eṉa mikak kaṭutta kaimmalai
vār kaṭām allatu, am maṉṉaṉ cēṉaiyē.