கம்பராமாயணம் 2366 · அயோத்தியா 10.48

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆள் உலாம் கடலினும் - மக்கள் மரக்கலத்தில் ஏறி உலாவுதற் கடனாக உள்ள கடலைக்காட்டிலும்; அகன்ற அக்கடல் - விரிந்து பரந்துள்ள அச் சேனைக்கடலில்; வாள் உலாம் நுதலியர் - ஒளி பரந்த நெற்றியுடைய மகளிரது; மருங்குல் அல்லது - (மின்னல் போன்ற) இடையே அல்லாமல்; (வேறாகிய) தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி - தோளின்கண் தவழ்கின்ற காதணியாகிய குண்டலம் முதலாகிய பழமையாக அணியும் அணிகளின்; கேழ் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லை - நிறம் விளங்குகின்ற மின்னல் ஒளி மிக்கு ஒளிர்வது இல்லை.

பெண்கள் இடைமின்னல் ஒளி அன்றி, வேறு அணிகளின் மின்னொளி இல்லை என்றபடி. கேழ் - நிறம்; எதுகை நோக்கிக் கேள் என நின்றது. “கெழு” என்னும் உரிச்சொல் 'கேழ்' என நின்றது. “குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே” (தொல். - சொல். உரி. 5) என்பது காண்க. அக்கடல் என்றது சேனையை; உருவகம். 'ஏ' காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In that sea, wider than the sea where men sail about,
  2. from the ear-rings that swing on the shoulder and the other time-honoured jewels
  3. no bright lightning-flash of colour flared at all,
  4. except from the waists of the women with shining brows.

What the poem says

The army is called a sea, broader than the real ocean that ships cross. Normally a crowd like this would flash with jewels like lightning: heavy ear-rings brushing the shoulders and other ornaments.

Now no one wears them. The only "lightning" left is the women's slender waists, which poets traditionally compare to a lightning streak. The poet bends the word for "colour" slightly to keep the verse's rhyme.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḷ ulām kaṭaliṉum akaṉṟa akkaṭal,
tōḷ ulām kuṇṭalam mutala tol aṇi
kēḷ ulām miṉ oḷi kiḷarntatu illaiyāl;
vāḷ ulām nutaliyar maruṅkul allatē.