கம்பராமாயணம் 2386 · அயோத்தியா 11.9

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

கட்டிய - (இடைக்கச்சில்) கட்டப்பெற்றுள்ள; சுரிகையன் - உடைவாளை உடையவன்; கடித்த வாயினன் - (பற்களால்) உதட்டைக் கடித்துக் கொண்டிருப்பவன்; வெட்டிய மொழியினன் - கடுமையாகப் பேசும் சொற்களை உடையவன்; விழிக்கும் தீயினன் - (கண்கள்) விழித்துப் பார்க்கும் நெருப்புத் தன்மை உடையவன்; கொட்டிய துடியினன் - அடிக்கப் பெறும் உடுக்கையை உடையவன்; குறிக்கும் கொம்பினன் - (போர் குறித்து ஒலிக்கப் பெறும் ஊது கொம்பினை உடையவன்; “அமர் கிட்டியது” - “போர் அருகில் வந்துவிட்டது”; எனக் கிளரும் தோளினான் - என்று கருதி மகிழ்ச்சியால் மேல் எழும்பும் தோள்களை உடையவன் (ஆகி...) (வரும் பாடலில் முடியும்).

உதட்டைப் பற்களால் கடித்தலும், உரத்த சத்தமிட்டுக் கடுமையாகப் பேசுதலும், கண்கள் கனல் சிந்தச் சிவந்து பார்த்தலும் கோபத்தின் மெய்ப்பாடுகளாம். போர் கிடைத்தால் வீரர்களாயிருப்பார் மகிழ்தல் இயல்பு. 'கிட்டியது அமர்' என்றதால் குகனது தோள்கள் கிளர்ச்சியுற்றன என்றார். “போரெனில் புகலும் புனைகழல் மறவர்” (புறம் 31) என்பதும் காண்க. துடியும், கொம்பும் போர்க்காலத்து வீரர்களுக்கு உற்சாகமூட்ட எழுப்பப்படும் வாத்தியங்களாகும். எனவே, இப்பாடலால் குகன் போருக்குச் சித்தமானான் என்பதைக் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With his dagger strapped on, his lips bitten,
  2. his words cutting, fire in his staring eyes,
  3. his drums beating, his signal horns sounding,
  4. his shoulders swelling at the thought, 'Battle has come!' —

What the poem says

The long sentence continues with Kukaṉ's signs of anger and his readiness for war. He has a short sword tucked into his waistband. He bites his lip, speaks harshly, and glares with fiery eyes.

His war drums are beaten and his horns blown to stir the warriors. As a true fighter he is glad that a battle is coming, and his shoulders swell with eagerness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭṭiya curikaiyaṉ, kaṭitta vāyiṉaṉ,
veṭṭiya moḻiyiṉaṉ, viḻikkum tīyiṉaṉ,
koṭṭiya tuṭiyiṉaṉ, kuṟikkum kompiṉaṉ
'kiṭṭiyatu amar ' eṉak kiḷarum tōḷiṉāṉ.