கம்பராமாயணம் 2385 · அயோத்தியா 11.8

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மை உறவு உயிர் எலாம் இறுதி வாங்குவான் ,
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்
ஐ ஐநூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான் , வில்லின் கல்வியான் .

பொருள் · Meaning in Tamil

மை உற - தீமை உண்டாக; இறுதி உயிர் எலாம் வாங்குவான் - இறுதிநாள் வந்த பொழுது உயிர்கள் எல்லாவற்றையும் (அவற்றின் உடலிலிருந்து) வாங்குகின்ற; கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான் - கையிற் பொருந்தி முக்கிளையாகப் பிரியும் சூலத்தை ஏந்திய யமனே; ஐ - அழகிய; ஐந் நூறாயிரம் உருவம் ஆயின - ஐந்து இலட்சம் வடிவம் எடுத்தாற் போன்ற; உறு மெய் தானையான் - வலிய உடம்புடைய சேனையை உடையவன்; வில்லின் கல்வியான் - வில்வித்தையில் தேர்ந்தவன்.

“ஐ - இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர்” என (1983) முன்னர்க் கூறியது, இருபதோடு ஐந்து வைத்துப் பெருக்க நூறு ஆகும். நூறு ஆயிரவர் எனக் கூட்ட இலட்சம் ஆகும். முன்னர் உள்ள 'ஐ' என்ற ஐந்தால் முரண 'ஐந்துலட்சம்' சேனை என வரும். அது நோக்கி, இங்கும் 'ஐந்நூறாயிரவர்' என்பதற்குப் பொருள் உரைத்தாம். முன்னர் உள்ள 'ஐ' அழகு, வியப்பு என்னும் பொருள் பற்றி வந்தது. எண் பற்றி வந்ததன்று. எண்ணாகக் கொள்ளின் முன்பாடற் றொகையோடு மாறுபடும் ஆதலின் என்க. குகனது சேனை வீரர்கள் காலனை ஒத்தவர்கள் என்று அவனது சேனைப் பெருமை கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if Death, who to work harm takes away every life at the end,
  2. holding the forked spear firm in his hand,
  3. had taken on five hundred thousand wondrous forms —
  4. such was his army of strong bodies; he, master of the bow —

What the poem says

Kukaṉ's own army is described. Each of his hunters is like Kālaṉ, the god of death, who carries a three-pronged spear and takes every life at the end of time. It is as if Death had split himself into five hundred thousand shapes, and Kukaṉ himself is a master archer.

The commentary explains the number. The opening "ai" means "wondrous" and is not a numeral, so the force matches the count of Kukaṉ's men given earlier in the poem.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mai uṟa uyir elām iṟuti vāṅkuvāṉ,
kai uṟu kavar ayil piṭitta kālaṉtāṉ
ai ain nūṟāyiram uruvam āyiṉa
mey uṟu tāṉaiyāṉ, villiṉ kalviyāṉ.