கம்பராமாயணம் 2384 · அயோத்தியா 11.7

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குகன் எனும் பெயரிய கூற்றின் ஆற்றலான் ,
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் ,
நகை மிகக் கண்கள் தீ நாற நாசியில்
புகை உறக் குனிப்புறும் புருவப் போர் விலான் .

பொருள் · Meaning in Tamil

குகன் எனப் பெயரிய - குகன் என்ற பெயரை உடைய; கூற்றின் ஆற்றலான் - யமனை ஒத்த பராக்கிரமத்தை உடைய வேடர் தலைவன்; தொகை முரண் சேனையை - கூட்டமாக உள்ள வலிமை படைத்த (பரதன் சேனையை, துகளின் நோக்குவான் - ஒரு தூசி போலப் பார்ப்பவனாய்; நகை மிக - (இகழ்ச்சிச் சிரிப்பு அதிகமாக; கண்கள் தீ நாற - கண்களிலிருந்து நெருப்புத் தோன்ற; நாசியில் புகை உற - (உள்ளே எரியும் கோபநெருப்பால்) மூக்கிலிருந்து புகை வெளிவர; குனிப்புறும் - (கோபத்தால்) மேலேறி வளைந்த; புருவப் போர்விலான் - புருவமாகிய போர்க்குரிய வில்லை உடையனானான்.

மேல் பாட்டில் 'எடுத்த சீற்றத்தான்' என்றார். குகனுக்கு வந்த சீற்றத்தின் மெய்ப்பாடுகளை இங்கே கூறினார். சேனை வருவதை முன்னவர் வந்த 'துகளினால்' பார்த்தறிந்தான் என்றலும் ஒன்று. 'புருவப் போர்வில்' என்றது உருவகம். புருவத்துக்கு வில் உவமை. வளைதல் தன்மையால்; போர்க்கு மேலும் வளைப்பர். அதுபோல இங்கே கோபத்தால் புருவம் மேலேறி மேலும் வளைந்தது. அதனால், 'போர்விலான்' என்றார். இனி அவன் சீற்றம் தொடர்வதைத் தொடர்ந்து கூறுகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who bore the name Kukaṉ, with the strength of Death,
  2. looking on that vast, mighty army as so much dust,
  3. with scornful laughter rising, his eyes giving off fire, smoke
  4. pouring from his nostrils, his brows bent like a bow drawn for battle —

What the poem says

The poet describes Kukaṉ's fury. He looks at the enormous army as if it were a speck of dust, and he laughs in contempt. His eyes flash fire, and smoke seems to pour from his nose as if anger were burning inside him.

His eyebrows, already bow-shaped, arch even higher, like a bow drawn back for war.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kukaṉ eṉap peyariya kūṟṟiṉ āṟṟalāṉ,
tokai muraṇ cēṉaiyait tukaḷiṉ nōkkuvāṉ,
nakai mikak kaṇkaḷ tī nāṟa nāciyil
pukai uṟak kuṉippuṟum puruvap pōrvilāṉ.