கம்பராமாயணம் 2393 · அயோத்தியா 11.16

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“இவன் - இப் பரதன்; 'முன்னவன்' என்று நினைந்திலன் - (இராமபிரானைக் குறித்து) தன் அண்ணன் என்று நினைந்தானில்லை; 'மொய் புலி அன்னான் ஓர் பின்னவன் நின்றனன்' - வலிமை நெருங்கிய புலியை ஒத்த இளவலாகிய இலக்குவன் இராமனுக்குத் துணையாக உடன் உள்ளான்; என்றிலன் - என்று கருதினானும் இல்லை; அன்னவை பேசானேல் - அந்த (இராம இலக்குவர்களாகிய) இரண்டையும் பற்றி நினைக்காமல் விட்டாலும்; என்னை இகழ்ந்தது என் - (இடையே கங்கைக் கரையுடைய) என்னையும் (ஒரு பொருளாக மதியாமல் இகழ்ந்தது என கருதி?; இவ் எல்லை கடந்து அன்றோ - (இவன் இராமன்பால் போர்செய்வது) இந்த எனது எல்லையைக் கடந்து சென்றால் அல்லவா?; வேடர் விடும் சரம் - வேடர்கள் விடுகின்ற அம்புகள்; மன்னவர் நெஞ்சினில் - அரசர்கள் மார்பில்; வாயாவோ” - தைத்து உள் நுழைய மாட்டாவோ? இராமனைத் தமையன் என்று கருதியிருந்தால் அரசை அவன்பால் கொடுத்திருப்பான், புலி அன்ன இலக்குவன் இராமன் உடன் உள்ளான் என்று கருதினால் போருக்கு வராமல் இருந்திருப்பான் என்றான். என் ஆற்றலையும் உணராதவனாய் உள்ளானே என்று இகழ்ந்தானாம் - இறுதியடி இகழ்ச்சிக்குறிப்பாகப் பேசிய வீரவசனம். 'அன்னவை பேசானேல்' பேசுதல் எண்ணுதல் என்ற பொருளில் வந்துள்ளது. எண்ணுதலைப் பேசுதல் என்றது உபசார வழக்கு ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He did not think of him as his elder brother; nor did he think
  2. 'a younger brother like a mighty tiger stands beside him'; even if he gave those no thought,
  3. why did he hold me in contempt? Must he not first cross this border of mine?
  4. Will the arrows the hunters loose not sink into the breasts of kings?

What the poem says

Kukaṉ reasons out Paratan's supposed folly. If Paratan thought of Irāmaṉ as his elder brother, he would have handed him the throne. If he remembered that Ilakkuvaṉ, fierce as a tiger, was at Irāmaṉ's side, he would never have marched.

Even setting those two aside, he has ignored Kukaṉ, through whose territory he must pass. The last line is a taunt: do kings think a hunter's arrows cannot go into their chests?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉṉavaṉ eṉṟu niṉaintilaṉ; moy puli aṉṉāṉ, ōr
piṉṉavaṉ niṉṟaṉaṉ eṉṟilaṉ; aṉṉavai pēcāṉēl,
eṉ ivaṉ eṉṉai ikaḻntatu? iv ellai kaṭantu aṉṟō?
maṉṉavar neñciṉil, vēṭar viṭum caram vāyāvō?