கம்பராமாயணம் 2392 · அயோத்தியா 11.15

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“இவர் -; ஆழம் - ஆழத்தையும்; நெடுந் திரை - நீண்ட பெரிய அலைகளையும் உடைய; ஆறு - கங்கையாற்றை; கடந்து - தாண்டி; போவாரோ - அப்பால் (தென்கரைப் பகுதிக்குச்) செல்வார்களா? (மாட்டார்); வேழ நெடும்படை - யானைகளை உடைய நீண்ட பெரிய சேனையை, கண்டு - பார்த்து (பயந்து); விலங்கிடும் - புறமுதுகு காட்டி விலகிச் செல்லுகின்ற; வில் ஆளோ - வில் வீரனோ (நான்); 'தோழமை' என்று - (உனக்கும் எனக்கும்) நட்பு என்பதாக; அவர் சொல்லிய சொல் - அந்த இராமபிரான் சொல்லிய வார்த்தை; ஒரு சொல் அன்றோ - (காப்பாற்ற, மதிக்கப்பட வேண்டிய) ஒப்பற்ற வார்த்தை அல்லவா? (அந்நட்புக்கு மாறாக இவர்களைப் போகவிட்டால்); ஏழைமை வேடன் - அற்பனாகிய இந்த வேடன்; இறந்திலன் - (இவ்வாறு இராமனோடு நட்புச் செய்து, இப்பொழுது சேனைக்குப் பயந்து இராமனை எதிர்க்கும் பரதனோடு நட்பாய் மானங்கெட்டு வாழ்தலைவிட) இறக்கலாமே, அது தானும் செய்தானிலனே; என்று எனை ஏசாரோ - என்றிவ்வாறு உலகத்தார் என்னைப் பழியாமல் விடுவார்களா - (பழிப்பர்) (தொடரும்) 'போவாரோ', 'ஏசாரோ' என்பனவற்றுள் எதிர்மறை இறுதியில் ஓகாரங்கள் ஐயவினாப் பொருளில் வந்துள்ளன. இனி இரண்டு எதிர்மறை உடன்பாட்டுப் பொருள் என்ற கருத்தில் 'ஆ' 'ஓ' என்ற இரண்டையும் எதிர்மறை எனக் கொண்டு கூறலும் ஒன்று. இவ்வாறே முன்னுள்ளவற்றிற்கும், பின்வருவனவற்றிற்கும் காண்க. 'தோழமை என்று அவர் சொல்லிய சொல்லைக்' குகன் 'செய்குவென் அடிமை' (1969) என்றபொழுது அவன் கூறிய கொள்கை (தொண்டன்) கேட்ட அண்ணல், அதனை விலக்கி “யாதினும் இனிய நண்ப” (1970) என்றும், “என் உயிர் அனையாய் நீ, இளவல் உன் இளையான், இந் நன்னுதலவள் நின்கேள்” (1988) என்றும், “முன்பு உளெம் ஒரு நால்வேம்..... இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்” என்றும் (1988) இராமன் கூறியவற்றைக் கொண்டு அறிக. “ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது..... தோழன் நீ எனக்கு” (திவ்யப். 1418) என ஆழ்வார் கூறியதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. “ஏழை வேடனுக்கு, 'எம்பி நின் தம்பி, நீ தோழன்; மங்கை கொழுந்தி' எனச் சொன்ன, வாழி நண்பு” (5091) என்று இவரே பிற்கூறியது கொண்டும் அறியலாம்.

'தோழமை' என்றது பண்பாகு பெயராய்த் தோழன் என்பதைக் குறித்தது. காட்டிலே வாழும் வேடுவராகிய தமக்கு 'வேழ நெடும்படை' ஒரு பொருட்டல்ல என்பது கருதி அதனைக் கூறினான். “யானை உடைய படை காண்டல் முன்னினிதே” (இனியவை 5) என்பதும் காண்க. 'ஏழைமை' என்பது அறியாமைப் பொருளதாயினும் ஈண்டு எளிமை, அற்பம் என இகழ்பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Will these men cross the deep river of long waves and go on?
  2. Am I a bowman who turns aside at the sight of a long army of elephants?
  3. The word he spoke, calling me 'friend' — was that not a word beyond compare?
  4. Will they not jeer at me: 'That wretched hunter did not even die'?

What the poem says

Kukaṉ goes on. Paratan's men will never get across the deep, rolling Gaṅgā, and he is not an archer who backs away at the sight of elephants.

Above all, he remembers that Irāmaṉ himself called him "friend". When Kukaṉ offered to be his servant, Irāmaṉ refused and named him a brother, saying that they had been four brothers and were now five. If Kukaṉ broke faith with that, people would rightly mock him as a lowly hunter who did not even have the honour to die fighting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḻa neṭun tirai āṟu kaṭantu ivar pōvārō?
vēḻa neṭum paṭai kaṇṭu vilaṅkiṭum villāḷō?
tōḻamai eṉṟu avar colliya col oru col aṉṟō?
'ēḻaimai vēṭaṉ iṟantilaṉ ' eṉṟu, eṉai ēcārō?