கம்பராமாயணம் 2391 · அயோத்தியா 11.14

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

“என் ஆருயிர் நாயகன் - என் அரிய உயிர்த் துணைவனாகிய; அஞ்சனவண்ணன் - மை போலும் கரிய நிறமான திருமேனி அழகனாகிய இராமபிரான்; அரசு ஆளாமே - ஆட்சி உரிமை எய்தாதபடி, வஞ்சனையால் - சூழ்ச்சியால்; எய்திய - (அவ்வரசாட்சியைக் கைப்பற்றி) அடைந்த; மன்னரும் - அரசரும் (பரதரும்); வந்தாரே - (இதோ என்னருகில்) வந்துள்ளார்கள் அன்றோ!; தீ உமிழ்கின்றன செஞ்சரம் - நெருப்பைக் கக்குகின்றனவான (என்) சிவந்த அம்புகள்; செல்லாவோ - (இவர்கள் மேற்) செல்லாமல் போய்விடுமோ?; இவர் உஞ்சு போய்விடின் - இவர்கள் (என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து (இராமன் இருக்கும் இடத்துக்குப்) போய்விட்டால்; 'நாய்க்குகன்' என்று - (உலகோர் குகன் நாய் போன்ற கீழ்த்தன்மை உடையவன் என்று; எனை - என்னைப் பற்றி; ஓதாரோ - சொல்லாமல் இருப்பார்களா? (தொடரும்) இவன் ஈடுபட்டது அவன் திருமேனி அழகில் ஆதலின், அது தனக்கும் அவனுக்கும் ஒன்றாயிருத்தலின் 'அஞ்சன வண்ணன்' என்று இது மேலிட்டு வந்தது என்க. இராமன் பெற வேண்டிய அரசைப் பரதன் பெற்றது பற்றியது சீற்றம் என்பதைத் தெரிவித்தான். 'நாய்' என்பது ஒருவரைக் கீழ்மைப்படுத்திப் பேசுதற்குப் பயன்படுவது ஆதலின் இங்கே 'நாய்க்குகன்' என்று உலகம் தன்னை இழித்துப் பேசும் என்றான். பரதன் படைகளைப் போகவிடில் இராமன்பால் காட்டும் நன்றியுணர்வுக்கு மாறானது; அச்செயலைச் செய்யும் குகனுக்கு நன்றியுணர்வில் சிறந்த நாயைக் கூறலாமோ எனின், அற்றன்று, நாய் நன்றியுணர்விற் சிறந்ததாயினும் தன் வீட்டுக்குடையவன்பால் காட்டும் நன்றியுணர்வைத் தன் வீட்டில் திருட வரும் திருடன் தனக்கோர் உணவு கொடுத்த வழி அவன்பாலும் நன்றி காட்டிக் குரைக்காது ஒரோவழி இருந்துவிடல் பற்றி அதன் நன்றியுணர்வும் சிறப்பின்மை கண்டு உலகம் அதனைக் கீழ்மைப்படுத்திக் கூறுதல் தெளிவாம். 'குகன் நாய்' என்று சொல்வதினும் 'நாய்க் குகன்' எனல் மேலும் இளிவரலாம். உரையினும் 'பாவத்துக்கே' கம்பர் இது போன்ற இடங்களில் முதன்மை தருதல் வெள்ளிடை. ஏகார, ஓகாரங்கள் ஐய, வினாப் பொருளில் வந்துள்ளன. 'மன்னர்' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. உயர்சொல்தானே குறிப்பு நிலையால் இழிபு விளக்கிற்று (தொல். சொல். கிளவி. சேனா. 27).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the one dark as collyrium, the lord of my precious life, should not rule,
  2. the kings who seized the kingdom by treachery have come here, have they!
  3. My red arrows that spit out fire — will they not reach them?
  4. If these men get away alive, will they not call me 'Kukaṉ the dog'?

What the poem says

The first of Kukaṉ's war speeches to his men. Here the metre changes. To him Paratan is a usurper who took by trickery the throne that belonged to Irāmaṉ, the dark-skinned lord Kukaṉ loves as his own life. He sneers at Paratan and his people by calling them "kings".

If they get past him alive, he says, the world will call him "dog Kukaṉ". The commentary explains the insult: a dog is loyal, but it can be bribed into silence by a thief who feeds it, and letting Irāmaṉ's enemies pass would be that kind of failure.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1añcaṉa vaṇṇaṉ, eṉ ār uyir nāyakaṉ, āḷāmē,
vañcaṉaiyāl aracu eytiya maṉṉarum vantārē!
ceñ caram eṉpaṉa tī umiḻkiṉṟaṉa, cellāvō?
uñcu ivar pōyviṭiṉ, ''nāykkukaṉ '' eṉṟu eṉai ōtārō?