கம்பராமாயணம் 2390 · அயோத்தியா 11.13

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1''துடி எறி ; நெறிகளும் துறையும் சுற்றுற
ஒடி எறி ; அம்பிகள் யாதும் ஓட்டலிர் ;
கடி எறி ; கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி ; எறி பட '' எனப் பெயர்த்தும் கூறுவான் .

பொருள் · Meaning in Tamil

“துடி எறி - போர்ப் பறைகளை அடியுங்கள்; நெறிகளும் துறையும் - வருவதற்குரிய வழிகளையும் (தென்கரையில்) ஏறுதற்குரிய துறைகளையும்; ஒடி எறி - அழித்துநீக்கி, இல்லாமல் செய்யுங்கள்; அம்பிகள் யாதும் ஓட்டலிர் - தோணிகளுள் ஒன்றையும் (கங்கையில்) ஓட்டாதீர்கள்; கடி எறி கங்கையின் - விரைந்து அலைவீசி வருகின்ற கங்கையாற்றின்; கரை வந்தோர்களை - தென்கரைக்கு (தரமாக முயன்று) வந்தவர்களை; பிடி - பிடியுங்கள்; பட எறி” - இறக்கும்படி அழியுங்கள்; எனா - என்று (குகன்) கூறி; பெயர்த்தும் - மேலும்; கூறுவான் - சில வீரவார்த்தைகளையும் சொல்லுவான் ஆனான்.

துடி என்பது ஈண்டுப் போர்ப்பறைகளுக்கு உபலக்கணம். துடியொன்று கூறவே மற்றப் பறைகளும் கொள்ளப்பட்டன. பரதனது சேனை இராமன்மேல் படையெடுத்து வந்துள்ளதாகக் குகன் கருதினான் ஆதலின், அச்சேனை தென்கரை அடையாதபடி எச்சரிக்கையாகத் தன் சேனைகளுக்குக் கட்டளை இடுகிறான் என்க. மேலும், அச் சேனை வீரர்கள் உற்சாகம் அடைவதற்காகச் சில வார்த்தைகள் மேல் கூறுகிறான். 'கடி எறி' காவலாக வை என்றுரைப்பதும் உண்டு; அது பிடி என்பதற்குப் பின் உரைப்பின் பொருந்தும். 'தோணிகள் ஓட்டாதீர்' என்றான் ஆதலின் 'விரைந்து அலைவீசி ஓடும்' கங்கையில் தோணிகள் உதவியின்றித் தென்கரை அடைதல் இயலாது என்பதைப் பின்னர்க் கூறினான். அதனையும் மீறித் தம் ஆற்றலால் வருவாரைப் 'பிடி' 'பட எறி' என்பது அதன்பின் கூறப்பட்டது. குகனது சிந்தனை யோட்டத்தை இப்பாடல் சுட்டிச் செல்கிற அழகு காண்க. 'எறி', 'பிடி' என வீரரைத் தனித்தனி நோக்கி ஒருமையிலும், 'ஓட்டலிர்' எனக் கூட்டமாக பார்த்துப் பன்மையிலும் கூறினான் என்க. இனி ஒருமை பன்மை மயக்கம் எனினும் அமையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Beat the drums! Break up and wreck the paths and landing-places
  2. all around; do not let a single boat put out;
  3. on the swift, wave-tossed Gaṅgā, those who reach the bank
  4. seize them, strike them down!' — so he said, and spoke again.

What the poem says

Kukaṉ gives his battle orders. Beat the war drums; destroy every path and landing-place on the southern bank; let no boat out on the river. Without boats, no one can cross the fast-flowing Gaṅgā.

Anyone who still manages to reach the bank is to be seized and killed. The commentary points out that the orders follow the order of his thinking. He also shifts between addressing his men one by one and as a group.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''tuṭi eṟi; neṟikaḷum tuṟaiyum cuṟṟuṟa
oṭi eṟi; ampikaḷ yātum ōṭṭalir;
kaṭi eṟi; kaṅkaiyiṉ karai vantōrkaḷaip
piṭi; eṟi paṭa '' eṉā peyarttum kūṟuvāṉ.