கம்பராமாயணம் 2389 · அயோத்தியா 11.12

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

(தென்கரை வந்து சேர்ந்த குகன்) தோன்றிய புளிஞரை நோக்கி - (தென்கரையில் தன்னால் அழைக்கப்பட்டுத் தன்முன் வந்து) தோன்றிய வேடர்களைப் பார்த்து; “ஆன்ற பேர் அரசு - நிரம்பிய பெரிய அரசாட்சியை; என் உயிர்த் துணைவற்கு - என் உயிர்போலச் சிறந்த தோழனாகிய இராமனுக்கு; ஈகுவான் - தருவதற்காக; சூழ்ச்சியின் ஊன்றிய சேனையை - (அதனை அவன் பெறாமல் தடுக்கும்) ஆலோசனையோடு எதிரில் (வடகரையில்) கால் ஊன்றி நிற்கும் (இப்பரதனது) சேனையை, உம்பர் ஏற்றுதற்கு - (போரில் தொலைத்து) வீரசுவர்க்கத்தே செல்ல விடுதற்கு; ஏன்றனென் - தொடங்கியுள்ளேன்; நீர் அமைதிர் ஆம்” - நீங்களும் இதற்கு உடன்படுவீர்களாக; என்றான் - என்று சொன்னான்.

அரசன் கீழது சேனையாயினும், தன் கருத்தை அவர்கள்பால் தெரிவித்து அவர்கள் உடன்பாடு வேண்டல் பண்பாட்டின் சிறப்பினைத் தெரிவிக்கும். போரில் இறந்தார் வீரசுவர்க்கம் பெறுதல் நூல் முடிபு ஆதலின் 'உம்பர் ஏற்றுதல்' என்று அதனைக் கூறினான். 'ஈகுவான்' என்னும் வினையெச்சம், 'ஏற்றுதற்கு' என்னும் வினையொடு முடிந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at the hunters who had appeared before him, he said: 'This army that stands planted there
  2. with its scheming, I have set out to send up to heaven,
  3. so as to give to the companion of my life
  4. the great and ample kingdom; you will agree to this.'

What the poem says

Kukaṉ addresses the hunters who have gathered at his call. He has decided to send Paratan's army, which he believes is camped on the far bank to keep Irāmaṉ from his throne, "up to heaven", because warriors who die in battle go to a heroes' heaven. That way the kingdom can go to Irāmaṉ, his dearest friend.

Though he is their chief, he courteously asks his men to agree, which the commentary takes as a mark of good breeding.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōṉṟiya puḷiñarai nōkki 'cūḻcciyiṉ
ūṉṟiya cēṉaiyai umpar ēṟṟutaṟku
ēṉṟaṉeṉ; eṉ uyirt tuṇaivaṟku īkuvāṉ
āṉṟa pēr aracu; nīr amaitir ām ' eṉṟāṉ.