கம்பராமாயணம் 2395 · அயோத்தியா 11.18

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரும் தவம் என் துணை ஆள , இவன் புவி ஆள்வான் ஓ ?
மருந்து எனின் அன்று உயிர் ; வண் புகழ் கொண்டு பின் மாயேன் ஓ ?
பொருந்திய கேண்மை உகந்தவர் தம்மொடு போகாது ஏ
இருந்ததும் நன்று கழிக்குவென் என்கடன் இன்று ஓடு ஏ .

பொருள் · Meaning in Tamil

என் துணை - எனக்கு நண்பனாகிய இராமன்; அருந் தவம் ஆள - அரிய தவத்தைச் செய்துகொண்டிருக்க; இவன் - இந்தப் பரதன்; புவி ஆள்வானோ? - உலகத்தை ஆட்சி செய்வானோ? (அதையும் பார்த்துவிடுவோம்); உயிர் - என்னுடைய உயிர்; மருந்து எனின் - (கிடைத்தற்கரிய) தேவர் அமுதமோ என்றால்; அன்று - அல்ல (நான் அப்படி அதை அரிதாக எண்ணிப் பாதுகாக்க நினைக்க வில்லை); வண்புகழ்கொண்டு - (இராமனுக்காகப் பரதனை எதிர்த்து) அதனால் சிறந்த புகழைப் பெற்று; பின் மாயேனோ - அதன் பிறகு உயிர்துறக்க மாட்டேனோ?; பொருந்திய கேண்மை - மிகவும் ஒட்டிய உறவை; உகந்தவர் தம்மொடு - என்பால் கொண்டு மகிழ்ந்த இராம இலக்குவர்களோடு; போகாதே - உடன் செல்லாமல்; இருந்தது நன்று - (நான்) இங்கேயே தங்கியது நல்லதாய்ப் போயிற்று; என்கடன் - (நான்) இராமனுக்குச் செய்ய வேண்டிய கடமையை; இன்றோடு கழிக்குவென் - இன்றைக்கே செய்து முடிப்பேன்.

என் துணை - என் அண்ணன் எனலும் ஆகும். “முன்பு உளெம், ஒரு நால்வேம், முடிவு உளது என உன்னா, அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளெர் ஆனோம்” (1995) என்பது கொண்டு இராமன் குகன் அண்ணன் தம்பி முறையாதல் அறியலாம். “உயிர் மருந்து எனின் அன்று” என்பதற்கு, “மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை, பெருந்தகைமை, பீடு அழிய வந்த இடத்து” (குறள் 968) என்பது பற்றி உரை காண்க. மருந்து - உயிரைக் காப்பாற்றி நிறுத்தவல்ல சஞ்சீவினி போன்ற மருந்தும் ஆகும். 'நன்று' என்பதற்கு 'நன்றாயிருந்தது' எனத் தன்னிகழ்ச்சியாகப் பொருள் கூறி, நான் அவர்களுடனேயே போயிருக்க வேண்டும், போகாமல் தங்கியது நன்று என்று கூறுதல் உண்டு. அப்பொருள் இங்கு ஏற்குமேல் கொள்க. இராமனுக்குப் பகைவராய் உள்ளாரை அழித்தலைத் தன் கடமை செய்தலாகக் குகன் கருதினன் என்க. 'ஏ'காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While my companion lives out hard penance, shall this man rule the earth?
  2. My life is no elixir of the gods; shall I not win bright fame and then die?
  3. It was well that I did not go along with those who delighted
  4. in our close bond, but stayed; this very day I will discharge my debt.

What the poem says

Kukaṉ asks whether Paratan really thinks he can rule the land while Irāmaṉ lives as a penniless ascetic in the forest. His own life is not the gods' nectar, too precious to risk. He would rather win glory and die.

He even finds it fortunate that he stayed behind when Irāmaṉ and Ilakkuvaṉ went on. Now he can repay what he owes Irāmaṉ, who adopted him as a brother, by destroying his enemies today.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arun tavam eṉ tuṇai āḷa, ivaṉ puvi āḷvāṉō?
maruntu eṉiṉ aṉṟu uyir; vaṇ pukaḻ koṇṭu piṉ māyēṉō?
poruntiya kēṇmai ukantavartammoṭu pōkātē
iruntatu naṉṟu kaḻikkuveṉ eṉ kaṭaṉ iṉṟōṭē.