கம்பராமாயணம் 2396 · அயோத்தியா 11.19

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தும்பியும் மாவும் மிடைந்த பெரும்படை சூழ்வாரும்
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்று ஓ ?
வெம்பிய வேடர் உளீர் ! துறை ஓடம் விலக்கீர் ஓ
நம்பி முன்னே இனி நம் உயிர் மாய்வது நன்று அன்றோ ?

பொருள் · Meaning in Tamil

தும்பியும் - யானைகளும்; மாவும் - குதிரைகளும்; மிடைந்த - நெருங்கிய; பெரும்படை - பெரிய சேனையால்; சூழ்வு ஆரும் - சுற்றப்படுதல் பொருந்திய; வம்பு இயல் தார் இவர் - மணம் வீசுகின்ற மாலையணிந்துள்ள இவர்கள்; வாள்வலி - படையின் ஆற்றல்; கங்கை கடந்து அன்றோ - இக் கங்கையாற்றைக் கடந்து போன பிறகு அல்லவா (காட்டமுடியும்?); வெம்பிய வேடர் உளீர்! - (இவர்களைக் கண்டு) மனப் புழுக்கம் அடைந்துள்ள வேடர்களாய் உள்ளவர்களே!; துறை ஓடம் விலக்கீரோ - நீர்த்துறையிலே இவர்களுக்கு ஓடம் விடுவதை நிறுத்திவிடுங்கள். (ஒருவேளை இவர் நம்மைத் தடுத்து மேற்செல்லும் ஆற்றல் உடையவராயினும் இவரோடு போரிட்டு); நம்பி முன்னே - இராமபிரானுக்கு முன்னாலேயே; நம் உயிர் மாய்வது - நமது உயிர் அழிந்து போவது; இனி நன்று அன்றோ? - இனிமேல் நல்லது அல்லவா?

“ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ”, “இவ் எல்லை கடந்து அன்றோ”, “சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ” என்பதனை ஒப்புக் காண்க. மணம் வீசும் மாலையைப் பரதனுக்குக் குகன்தானே இட்டான் எனக் கொள்க; அவன் படை எடுத்து வந்தான் என நினைத்தலின், தந்தை இறந்ததோடு தமையன் காடு செல்லவும் தான் காரணமாக இருத்தலின் பழிசுமந்தேன் என்று காடுநோக்கிக் கண்ணீரோடு வருகின்ற பரதன், மணம் வீசும் மாலை அணிந்து வந்தான் என்றல் பொருந்தாதாதலின், 'நீங்கள் ஓடம் ஓட்டாவிடினும் அவர்களே ஓடத்தைப் பயன்படுத்தி அக்கரை செல்லக்கூடும். ஆதலின், கங்கையில் ஓடங்களை அப்புறப்படுத்துங்கள்' என்று தன் சேனைவீரர்களுக்குக் குகன் கட்டளை இட்டான். போரில் வெற்றி தோல்வி உறுதி அல்ல ஆதலின், 'நம்பி முன்னே இனி நம் உயிர் மாய்வது நன்று' என்றானாம். 'ஓ'காரம் வினாப் பொருட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. These men with fragrant garlands, ringed by a great host thick with elephants and horses —
  2. is it not only after crossing the Gaṅgā that they can show the strength of their swords?
  3. You hunters burning with anger! Will you not keep the boats from the landing?
  4. Is it not better now that we lay down our lives before our lord?

What the poem says

Kukaṉ tells his men to move every boat away from the landing, so that Paratan's soldiers cannot simply take them and cross. Whatever their elephants and horses, they can only fight once they are over the river.

Battle is never certain, so he adds that if they must die, it is better to die fighting for Irāmaṉ before he is harmed. The "fragrant garlands" are Kukaṉ's own assumption about a prince he thinks has come for war; in fact Paratan is walking in mourning, in bark-cloth and tears.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tumpiyum māvum miṭainta perum paṭai cūḻvu ārum
vampu iyal tār ivar vāḷ vali kaṅkai kaṭantu aṉṟō?
vempiya vēṭar uḷīr! tuṟai ōṭam vilakkīrō
nampi muṉṉē iṉi nām uyir māyvatu naṉṟu aṉṟō?