கம்பராமாயணம் 2397 · அயோத்தியா 11.20

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1போன படைத் தலை வீரர் தமக்கு இரை போதா இச்
சேனை கிடக்கிடு ; தேவர் வரின் , சிலை மா மேகம்
சோனை படக் குடர் சூறை பட சுடர் வாளோடும்
தானை படத் தனி யானை படத் திரள் சாயேன் ஓ .

பொருள் · Meaning in Tamil

போன - (நம்முடன்) வந்துள்ள; படைத்தலை வீரர் தமக்கு - சேனையின்கண் உள்ள வீரர்களுக்கு; இரை போதா - (ஒருவேளைப்) போர்க்கும் பற்றாத, இச்சேனை - இந்தப் (பரதனது) சேனை; கிடக்கிடு - கிடக்கட்டும், தேவர் வரின் - தேவர்களே (படையெடுத்து) வந்தாலும்; சிலை மா மேகம் - என் வில்லாகிய கரிய மேகம்; சோனை பட - அம்பு மழையைச் சொரிய; குடர் சூறைபட - எதிரிகளது குடர்கள் சிதைந்து அலைய; தானை சுடர்வாளோடும் பட - எதிரிச் சேனைகள் தம் கையிற் பிடித்த படைக்கலங்களோடும் இறக்க; தனி யானை பட - ஒப்பற்ற யானைகள் அழிய; திரள் சாயேனோ - (அப்படை) கூட்டத்தை நிலைகுலைக்காமல் விடுவேனோ?

இரை என்பது உணவு. இங்கே வீரர்களுக்கு உணவாவது போர் ஆதலின், 'ஒருவேளைப் போர்' எனப் பொருள் உரைத்தாம். 'போன படைத்தலை வீரர்' இராம இலக்குவனர் என்றலும் ஒன்று. நம்மைத் தப்பிச் சென்றாலும் இராம இலக்குவர்களோடு இரை போதா இச்சேனை என்றானாம். 'தேவர் வரின்' - வரினும் என்ற சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. 'ஓ' வினாப்பொருட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Let this army be — it is not food enough for the warriors at the head of our host;
  2. even if the gods came, would I not, as the great dark cloud of my bow
  3. poured its rain, as entrails were scattered, as their soldiers fell with their bright swords
  4. and their matchless elephants fell, bring their massed ranks down?

What the poem says

Kukaṉ sneers that Paratan's army would not make a single meal for his fighters. Battle is a warrior's food, so it would not even give them one day's fight.

Even if the gods themselves came, his bow would pour arrows like a black storm cloud pours rain, and he would cut down their ranks, their swords and their elephants. Another reading takes "the warriors who went ahead" to be Irāmaṉ and Ilakkuvaṉ: even if the army got past Kukaṉ, it would be no match for them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōṉa paṭait talai vīrartamakku irai pōtā ic
cēṉai kiṭakkiṭu; tēvar variṉ, cilai mā mēkam
cōṉai paṭak kuṭar cūṟai paṭa cuṭar vāḷōṭum
tāṉai paṭat taṉ yāṉai paṭat tiraḷ cāyēṉō.