கம்பராமாயணம் 2398 · அயோத்தியா 11.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்று - (முடிசூட்டு விழா நிகழ இருந்த) அந்நாள்; கொடை நின்ற கை - (முடிசூட்டுவதற்கு முன்பு செய்யவேண்டிய தானம் முதலியவற்றைச் செய்து) நின்ற திருக்கரங்களை உடைய; என் அன்பன் - என் அன்பிற்குரிய இராமன்; நெடுஞ் சீரை உடுக்க - பெரிய மரவுரியை உடுக்குமாறு; கொடுத்தவள் - (அவனுக்குக்) கொடுத்தவளாகிய கைகேயியின்; மைந்தர் பலத்தை - மகனார் ஆன பரதன் சேனையை; என் அம்பால் கொன்று குவித்த - என்னுடைய அம்பினால் கொன்று குவியல் செய்த; நிணம்கொள் பிணக்குவை - கொழுப்பு மிகுதிகொண்ட பிணங்களின் திரட்சியை; கங்கை - இந்தக் கங்கா நதி; கொண்டு ஓடி - இழுத்துக் கொண்டு விரைந்து சென்று; துன்று திரைக்கடல் - நெருங்கிய அலைகளை உடைய கடலில்; மடுத்து - அவற்றைச் சேர்த்து; இடை தூராதோ? - அக்கடல் இடத்தைத் தூர்த்து விடாதோ? (தூர்த்துவிடும்)
'நின்ற கொடைக் கை' என்பதற்கு என்றும் வள்ளலாக நின்ற எனவும் பொருள் உரைக்கலாம். சீரை - மரவுரி. அதன் பொல்லாங்கு கருதி நெடுஞ் சீரை என்றான் குகன் தன் ஆற்றாமையால். 'மைந்தர்' என்றது பரத சத்துருக்கனர்களையும் ஆம். சத்துருக்கனன் கைகேயியின் மகனல்லன் ஆயினும் பரதன் துணையாதலின் 'மைந்தர்' என ஒன்றாக்கிக் குறித்தான் குகன் எனல் அமையும் என்க. 'பலம்' என்றது சேனையை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She who that day gave my beloved, whose hand stood open in giving,
- the long bark-cloth to wear — the might of her sons, by my arrows
- killed and heaped into piles of fat-laden corpses, the Gaṅgā will carry
- running down to the crowded-waved sea — and will it not fill the sea up?
What the poem says
Kukaṉ's anger now turns on Kaikēyi. On the very day Irāmaṉ stood with his generous hands still giving gifts before his coronation, she handed him bark-cloth to wear instead.
Kukaṉ vows to kill her son's army with his arrows. The Gaṅgā will carry their corpses down to the ocean in such numbers that they choke and fill it. "Her sons" may include Catturukkaṉaṉ, who is not Kaikēyi's son but is at Paratan's side.