கம்பராமாயணம் 2399 · அயோத்தியா 11.22

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

ஆடு - அசையும்; கொடி - கொடிகளை உடைய; படை - சேனைகளை; சாடி - கொன்றழித்து; அறத்தவர் ஆள - தருமத்தின் துணைவர்களாய இராமஇலக்குவர்கள் ஆளும்படி, வேடு - வேடர்கள்; பார் கொடுத்தது - (இந்தப்) பூமியை மீட்டுக் கொடுத்தனர்; எனும் இப்புகழ் மேவீர் - என்கின்ற இந்தப் புகழை அடையுங்கள்; நாடு கொடுத்த என் நாயகனுக்கு - (இவர்கள் ஆளும்படி) தான் ஆட்சியுரியவேண்டிய நாட்டைக் கொடுத்துவிட்டு வந்த என் தலைவனாகிய இராமனுக்கு; இவர் - இந்தப் பரதர்; நாம் ஆளும் காடு - நாம் ஆட்சி செயும் நமக்கு உரிமையாகிய இந்தக் காட்டையும்; கொடுக்கிலர் ஆகி - ஆட்சி செய்ய மனம் பொறாதவராய்; எடுத்தது - படை எடுத்து வந்த படியை; காணீர் - காணுங்கள்.

போர் வீரர்களை நோக்கி இதனுள் உள்ள நியாய அநியாயங்களை அவர்களுக்கு விளக்கி, அவரவரது மனோநிலைக்கு ஏற்பத் தூண்டிப் போர்க்கு அவர்களைத் தயார் செய்வது அறிந்து இன்புறத்தக்கது. போர் என்றால் தினவும் தோள்களை உடையவர்களைப் பார்த்து, 'ஆடு கொடிப் படைசாடி' என்றான். அறத்தின் பொருட்டுத் தம்முயிரையும் கொடுக்கும் மனம் உடைய வீரர்களை நோக்கி, 'அறத்தவரே ஆள' என்றான். புகழ் ஆசை உடையாரைப் பார்த்து, 'வேடு கொடுத்தது பார் எனும் இப்புகழ் மேவீர்' என்றான். தம்முடைமையைப் பறிப்பாரைப் பொறாத குணம் உடைய வீரரைப் பார்த்து 'நாம் ஆளும் காடு கொடுக்கிலர் ஆகி' என்றான். இவ்வாறு பல்வேறு மனநிலையை வீரர்களையும் அவரவர்க்கு ஏற்பப் பேசிப் போர்க்குத் தயார் செய்வதாகக் குகனைப் பேச வைத்த கம்பர் கவி இனிமை தேரும்தொறும் இனிதாம் தமிழ்க்கு எடுத்துக் காட்டாகும். 'ஏ' தேற்றம். ஓகாரம் வினாப் பொருட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Crushing the army of fluttering banners, so that the righteous may rule,
  2. the hunters gave back the earth' — will you not win this fame?
  3. To my lord who gave away a kingdom, these men
  4. would not even give the forest that we rule — do you not see they have marched?

What the poem says

Kukaṉ ends his rallying speech, and the commentary admires how he speaks to every kind of man in his army. For those itching for battle there is the enemy's fluttering banners to smash. For those who would die for what is right, the chance to restore the righteous to power. For those who want glory, the fame of "the hunters who gave back the world".

For those who will not stand for anyone taking what is theirs, he says Irāmaṉ gave up a whole kingdom, and now Paratan will not even leave him the forest that Kukaṉ's own people rule.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''āṭu koṭip paṭai cāṭi, aṟattavarē āḷa
vēṭu koṭuttatu, pār '' eṉum ip pukaḻ mēvīrō?
nāṭu koṭutta eṉ nāyakaṉukku ivar, nām āḷum
kāṭu koṭukkilar āki, eṭuttatu kāṇīrō?