கம்பராமாயணம் 2400 · அயோத்தியா 11.23

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“மா முனிவர்க்கு - பெரிய தவசிகளுக்கு; உறவாகி - இனிய சுற்றமாகி; வனத்திடையே வாழும் - காட்டிடத்தில் வாழும்; கோ - இராமன்; முனியத் தகும்” - (தன் தம்பியான பரதனை எதிர்த்தால் என்னை) வெறுத்துக் கோபிப்பான்; என்று -; மனத்து இறை கொள்ளாது - மனத்தின்கண் சிறிதும் நினையாமல்; ஏ முனை உற்றிடில் - போர்முனையில் சென்று (பரதனைச் சந்தித்துப் போரிட்டால்; இப்பொழுது - இந்நேரத்தில்; ஏழு கடற் படை என்றாலும் - ஏழு கடல் அளவு சேனை என்றாலும்; ஆ முனையின் சிறு கூழ் என - பசு தின்பதற்கு முனைந்தவழி அதன் எதிரில் கிடந்த சிறிய புல் என்று சொல்லும்படி; ஆகாதோ - அனைத்தும் அழிந்து போகாதோ (போகும்.)

இராமனது குணங்களைக் குகன் நன்குணர்ந்தவன் ஆதலின், இராமனுக்கு உதவுவதாக, நன்றிக்கடன் செய்வதாக இதுகாறும் கூறிப் பரதனை எதிர்க்கத் துணிந்தவன், அச்செயல் இராமனுக்கு உகப்பாகாது என்பதையும் அறிந்து வைத்துள்ளான் என்க. அது இடைப்புகுந்த வழி போரின் வேகம் குறையும், தளர்ச்சி வரும் ஆதலின், மனத்திற் சிறிதும் அக்கருத்திற்கு இடம் கொடுக்காது போர்செய்தல் வேண்டும் என்றானாம். பசித்த பசுவின் முன் சிறிய பயிர் உண்ணப்பட்டு மாய்ந்து போதல் போல என்முன் இச்சேனை கணத்தில் அழியும் என்றான். 'கொள்ளாதே' 'ஏ'காரம் அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Without letting into your minds even a little the thought that the king
  2. who lives in the forest as kin to the great sages may well be angered,
  3. if we come to the arrow's edge, even an army as vast as the seven seas —
  4. will it not become, this moment, like tender shoots before a grazing cow?

What the poem says

Kukaṉ knows Irāmaṉ well enough to suspect he would be displeased if anyone attacked his brother Paratan on his behalf. He tells his men to put that thought completely out of their minds, because doubt slows the arm in battle.

Once fighting starts, he says, even an army as big as the seven seas will vanish in a moment, like young grass in front of a hungry cow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā muṉivarkku uṟavāki, vaṉattiṭaiyē vāḻum
kō muṉiyat takum eṉṟu, maṉattu iṟai koḷḷātē,
ē muṉai uṟṟiṭil, ēḻu kaṭaṟ paṭai eṉṟālum
ā muṉaiyiṉ ciṟu kūḻ eṉa ippoḻutu ākātō?