கம்பராமாயணம் 2405 · அயோத்தியா 11.28

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(பரதன்) என்று - இவ்வாறு சொல்லி; எழுந்த தம்பியொடும் - தன்னுடன் புறப்பட்ட சத்துருக்கனனொடும்; எழுகின்ற காதலொடும் - (இராமனிடத்தில் அன்புடையவனும், இராமனால் அன்பு செய்யப் பெற்றவனும் ஆகிய குகனைப் பார்க்கப் போகிறோம் என்று) உள்ளே மேலும் மேலும் உண்டாகின்ற பேரன்போடும்; குன்று எழுந்து சென்றது என - ஒருமலை புறப்பட்டுச் சென்றது என்று சொல்லுமாறு; குளிர் கங்கைக் கரை குறுகி - குளிர்ச்சி மிகுந்த கங்கையின் வடகரையை அணுக; நின்றவனை - நின்ற பரதனை; துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன் - நெருங்கிய கருமையான மணம் வீசும் தலைமுடி உடைய வேடர் தலைவனாய குகன்; நோக்கினான் - கண்ணால் (மனக் கருத்தோடு) பார்த்தான்; திருமேனி நிலை - வாடிச் சோர்ந்துள்ள பரதனது திருமேனியின் வாட்டமான உணர்ந்து கொண்டான்; துண் என்றான் - திடுக்குற்றான். பரதனைப்பற்றித் தான் எண்ணியதற்கும், அவன் நிலைக்கும் மிகவும் மாறுபாடாக இருந்தது கண்டு துணுக்குற்றான் என்க. இராம இலக்குவர் போலே பரத சத்துருக்கனர் ஆதலின், 'எழுந்த தம்பி' என்று பரதன் கட்டளை இட வேண்டாது அவன் குறிப்புணர்ந்து சத்துருக்கனன் புறப்பட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying this, he rose, and with his brother and with a love that kept on rising,
  2. like a hill that had got up and walked, he drew near the cool bank of the Gaṅgā;
  3. the one standing there he looked at, and saw the state of that fair body —
  4. and the king of the hunters, with his thick, dark, fragrant hair, was startled.

What the poem says

Paratan sets off at once with Catturukkaṉaṉ, who goes without being told, just as Ilakkuvaṉ always goes with Irāmaṉ. He moves like a walking hill, swelling with love at the thought of meeting Irāmaṉ's friend, and comes to stand on the north bank.

From across the water Kukaṉ looks at him properly for the first time and is shaken. The worn, wasted figure in front of him is nothing like the arrogant usurper he imagined.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu eḻuntu tampiyoṭum eḻukiṉṟa kātaloṭum
kuṉṟu eḻuntu ceṉṟatu eṉak kuḷir kaṅkaik karai kuṟuki
niṉṟavaṉai nōkkiṉāṉ, tiru mēṉi nilai uṇarntāṉ,
tuṉṟu karu naṟuṅ kuñci eyiṉar kōṉ tuṇṇeṉṟāṉ.