கம்பராமாயணம் 2406 · அயோத்தியா 11.29

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வற்கலையின் உடையானை - மரவுரியாலாகிய ஆடையை உடுத்துள்ள; மாசு அடைந்த மெய்யானை - புழுதி படிந்த உடம்பை உடைய; நற் கலை இல் மதி என்ன - நல்ல கலைகளில்லாத (ஒளியற்ற) சந்திரன் போல; நகை இழந்த முகத்தானை - ஒளி இழந்த முகத்தை உடைய; பரதனை; கண்ணுற்றான் - (குகன்) கண்ணால் சந்தித்துப் பார்த்து; கையினின்று வில் இடை வீழ - தன் கையிலிருந்து வில்லானது தானே சோர்ந்து நிலத்தின்கீழ் விழும்படி; விம்முற்று - துன்பத்தால் கலக்கமுற்று, நின்று ஒழிந்தான் - ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான்.

பரதன் திருமேனி நிலை எவ்வாறு இருந்தது என்பதை இச் செய்யுள் விவரிக்கிறது. பரதனது நிலை இராமன் வனத்தின்கண் சென்றதனால் அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தைக் காட்டுவதாக இருந்தது ஆதலின், இப்படிப்பட்டவனை எப்படி நினைத்துவிட்டோம் என்ற தன்னிரக்கமும் சேர்ந்து கையறுநிலையைக் குகனுக்கு உண்டாக்கியது ஆதலின் நின்றவன் நின்றவாறே உள்ளான் என்றவாறாம். மதிக்குக் கலையால் ஒளி கூடுதலின் ஒளி குறைந்த முகத்தைக் கலை இழந்த மதியோடு உவமித்தார். எப்பொழுதும் தன்னிடத்திருந்து நீங்காது உறுதியாகப் பிடித்திருக்கும் வில்லும் தன்னை மறந்த துயரநிலையில் குகன் கையிலிருந்து நழுவிக் கீழே தானே விழுந்தது என்பது குகனது நிலையைத் தெளிவாகக் காட்டும். அதனாலேயே, 'நின்றான்' என்னாது 'நின்றொழிந்தான்' என்றார்; ஒரு சொல்லாக்குக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Him in his garment of bark, his body grimed with dust,
  2. his face robbed of its brightness like a moon without its fair phases,
  3. his grief so deep it would melt stone — he saw him,
  4. and as the bow slipped from his hand to the ground, he stood choked with sobs, unable to move.

What the poem says

What Kukaṉ sees: Paratan dressed in bark-cloth, covered in dust, his face as dull as a moon that has lost its phases. His sorrow could soften a stone.

Kukaṉ is overwhelmed, both by Paratan's grief and by shame at how badly he misjudged him. The bow he never lets go of slides out of his hand to the ground, and he stands there helpless, choking back sobs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṟkalaiyiṉ uṭaiyāṉai mācu aṭainta meyyāṉai
naṟ kalai il mati eṉṉa nakai iḻanta mukattāṉai
kal kaṉiyak kaṉikiṉṟa tuyarāṉaik kaṇṇuṟṟāṉ,
vil kaiyiṉiṉṟu iṭai vīḻa, vimmuṟṟu niṉṟu oḻintāṉ.