கம்பராமாயணம் 2407 · அயோத்தியா 11.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நம்பியும் - ஆடவரிற் சிறந்த இப்பரதனும்; என் நாயகனை - என் தலைவனாகிய இராமனை; ஒக்கின்றான் - ஒத்திருக்கிறான்; அயல் நின்றான் - அருகில் இருக்கின்றவன் (ஆகிய சத்துருக்கனன்); தம்பியையும் ஒக்கின்றான் - இராமனது உடன்பிரியாத தம்பியாகிய இலக்குவனை ஒத்திருக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான் - (இப்பரதன்) தவத்துக்குரிய வேடத்தை மேற்கொண்டுள்ளான்; துன்பம் ஒரு முடிவு இல்லை - (இப் பரதன்) படுகிற துன்பத்துக்கோ ஓர் அளவே இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான் - இராமன் சென்ற திசையாகிய தென்திசையைப் பார்த்து அவ்வப்போது வணங்குகிறான்; (இவற்றால் இவன் துயர்நிலை விளங்குதலின்) எம்பெருமான் - எம்கடவுளாகிய இராமனுக்கு; பின்பிறந்தார் - தம்பிகள்; பிழைப்பு இழைப்பரோ - (தவறு செய்வார்களா) 'தவறு செய்வர் என்று நான் எண்ணியது பெரும் தவறு), என்றான் - என்று நினைத்தான்.
பரத சத்துருக்கனர்கள் இராம இலக்குவர்களைப் போன்றனர் என்றான். தவ வேடமும் அவ்வாறே ஒத்தது. துயர்நிலை இராமனுக்கு இல்லாதது. இராமனைப் பிரிந்ததனால் பரதனுக்கு உளதாயது. திசைநோக்கி தொழுதல் இராமபக்திக்கு அடையாளம். மூத்தோர்பால் இளையார் காட்டும் ஒரு மரபு எனலாம். “மன் பெரிய மாமனடி மகிழ்ந்து திசை வணங்கி” (சிந்தா. 849) காண்க. இராமனுக்குப் பரதன் தீங்கு செய்ய வந்துள்ளதாகக் கருதிய தனது பேதைமையைக் குகன் தனக்குள்ளே விசாரித்தான். ஆதலின், 'எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு' என்றான். பரதனைச் சந்தேகித்தற்குக் குகன் வருத்தம் உறுதல் வெளிப்படை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'This prince is just like my lord; the one standing beside him
- is like his younger brother too; he has taken on an ascetic's dress;
- his grief has no end; he turns toward that quarter and bows in worship —
- would those born after my Lord ever do wrong?' he said.
What the poem says
Kukaṉ talks himself out of his suspicion. Paratan looks exactly like Irāmaṉ, and Catturukkaṉaṉ beside him looks like Ilakkuvaṉ. Paratan wears the same ascetic dress, his sorrow is boundless, and he keeps turning south, the way Irāmaṉ went, and folding his hands in worship.
How could Irāmaṉ's own younger brothers mean him harm? Kukaṉ now sees his earlier fury as foolishness and is sorry he ever doubted Paratan.