கம்பராமாயணம் 2408 · அயோத்தியா 11.31

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

“உண்டு இடுக்கண் ஒன்று உடையான் - புதிதாக உண்டாகிய துன்பம் ஒன்றை உடையவனும்; உலையாத அன்பு உடையான் - இராமன்பால் சிறிதும் தளர்ச்சியுறாத அன்பு கொண்டவனும்; கொண்ட தவ வேடமே - (அந்த இராமன்) கொண்டிருந்த தவ வேடத்தையே; கொண்டிருந்தான் - தானும் கொண்டுள்ளவனும் ஆகிய இப்பரதனது; குறிப்பு எல்லாம் - மனக் கருத்து எல்லாம்; கண்டு - நேரில் பார்த்து அறிந்து; உணர்ந்து - அதனை என் அநுபவத்தாலும் நுகர்ந்து; பெயர்கின்றேன் - திரும்பி வருகின்றேன்; நெறி காமின்கள் - (அதுவரை) வழியைப் பாதுகாத்திருங்கள்;” என்னா - என்று சொல்லி; தண்துறை - (கங்கையின்) குளிர்ந்த நீர்த்துறையில், தான் ஓர் நாவாயில் ஒரு தனியே வந்தான். (குகன்) தான் ஒருபடகில் வேறு யாரும் இன்றித் தனியே வந்து சேர்ந்தான்.

தோற்றத்தால் விளங்காத பல செய்திகள் நெருக்கத்தால் விளங்கக்கூடும் ஆதலின் பரதன் மனக்கருத்து எல்லாம் 'கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்' என்று குகன் கூறினான். இங்கே 'அறிந்து' என்னாது 'உணர்ந்து' என்றது சிறப்பு. துக்காநுபவம் ஆகிய அன்பின் செறிவு உணர்ச்சியொத்தவரிடையே அநுபவம் ஆதல் அன்றி, அறிவினால் ஆராய்ந்தறியும் பொருள் அன்று ஆதலின், இடுக்கணும், உலையாத அன்பும் உடைய பரதனை, அதுபோலவே இடுக்கணும், உலையாத அன்பும் உடைய குகன் உணர்ச்சியொத்தலால் உணர்ந்து பெயர்கின்றேன் என்கிறான்; இந்நயம் அறிந்து உணரத் தக்கது. 'ஒரு தனியே தான் வந்தான்' என்றது இதுகாறும் பரதனை மாறாகக் கருதித் தன் படை வீரர்களிடம் பேசியவன் ஆதலின், தன் கருத்து மாற்றம் அவர்க்குப் புலப்படாமை கருதியும், அவர்களால் வேறு தொல்லைகள் உண்டாகாமை கருதியும், அவர்களுள் யாரையும் உடன் கொள்ளாது தனியே வந்தான் என்க. அதுபற்றியே கம்பரும் 'தனியே' என்னாது 'தான்' என்றும், 'ஒரு தனியே' என்றும் அழுத்தம் கொடுத்துக் கூறினார். அரசராவார் தம் கருத்தையும் தம் மன மாற்றத்தையும் தம்கீழ் வாழ்வார் அறியாதவாறு போற்றிக் காத்தல் வேண்டும் என்னும் மரபறிந்து மதிப்பவர் கம்பர் என்க. 'துன்பம் ஒரு முடிவு இல்லை' என்றவர், 'உண்டு இடுக்கண் ஒன்று உடையான்' என்று மீண்டும் கூறியது, இராமன் வனம் போவதால் ஏற்பட்ட துன்பம் இராமனைக் கண்டு மீண்டு போம்போது குறைதல் கூடும் ஆயினும் இவற்றுக்கெல்லாம் 'தான் காரணமானோம்' என்று கருதும் 'பழிபடப் பிறந்தேன்' என்ற இடுக்கண் என்றும் மாறாது கிடத்தலின் 'உண்டு இடுக்கண் ஒன்று உடையான்' என்று அதனையும் கருதிப் பரதனது புறத் தோற்றத்தையும் அகத் தோற்றத்தையும் புலப்படுத்தியதாக அமைகிறது. உலையாத அன்பு - வேறு காரணங்களால் நிலைகுலையாமல், என்றும் ஒருபடித்தாக இருக்கும் தளர்ச்சியில்லாத அன்பு என்றவாறாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'There is some sorrow he carries; he has a love that never falters;
  2. he wears the very ascetic's dress that our lord wore; all that is in his mind
  3. I will see and feel for myself and come back; guard the way meanwhile,' he said,
  4. and to the cool landing, in a single boat, he came all alone.

What the poem says

Kukaṉ tells his men to keep guarding the river while he goes over to learn what is really in Paratan's heart. The commentary dwells on the verb: he will not just "find out" but "feel" it. Sorrow and love are understood by someone who shares them, not by reasoning, and Kukaṉ shares both.

He crosses in a boat entirely alone, perhaps so his warriors, who have just heard him swear to fight, will not see how completely his mind has changed, and so none of them makes trouble.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''uṇṭu iṭukkaṇ oṉṟu; uṭaiyāṉ, ulaiyāta aṉpu uṭaiyāṉ
koṇṭa tava vēṭamē koṇṭiruntāṉ; kuṟippu ellām
kaṇṭu uṇarntu peyarkiṉṟēṉ; kāmiṉkaḷ neṟi; '' eṉṉā
taṇ tuṟai ōr nāvāyil oru taṉiyē tāṉ vantāṉ.