கம்பராமாயணம் 2409 · அயோத்தியா 11.32

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வந்து - (கங்கையின் வடகரைக்கு) வந்து; எதிரே தொழுதானை - தன்னை எதிரிலே கும்பிட்ட பரதனை; வணங்கினான் - (குகன்) தானும் வணங்கினான்; மலர் இருந்த அந்தணனும் தனை வணங்கும் அவனும் - (திருமாலின் திருவுந்தித் தாமரையில் வீற்றிருக்கும் வேதியனாகிய பிரமனும் தன்னை வணங்கும் சிறப்புப் பெற்ற பரதனும்; அவன் அடிவீழ்ந்தான் - அந்தக் குகனது அடித்தலத்தில் விழுந்து வணங்கினான்; (அதுகண்டு) தகவு உடையோர் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் - நடுவுநிலைமையிற் சிறந்த மேலோர்களது மனத்திலும், தலையிலும் ஏற்றிப் போற்றப்படும் புகழ் உடைய பண்பு நலம் செறிந்த உத்தமனாகிய குகனும்; தந்தையினும் களிகூர - பெற்ற தந்தையினும் மகிழ்ச்சிமிக; தழுவினான் - (அந்த அடி வீழ்ந்த பரதனை எடுத்து) மார்போடு அணைத்துக்கொண்டான் (தொடரும்)

குகனும் பரதனும் மிகச் சிறந்த பாகவத உத்தமர்கள்; இராமன்பால் ஆழங்காற்பட்ட அன்பினை உடையவர்கள்; ஒருவரை ஒருவர் தம்மிற் பெரியராக நினைப்பவர்கள். இப்பண்பு நலன்களை உடைய இருவர் சந்திப்பில் அளவு கடந்த அன்பின் பெருக்கால் நிகழும் நிகழ்ச்சிகளே இப்பாடலில் வருகின்றன. இப்பாடலில் வணங்கினான், அடிவீழ்ந்தான், தழுவினான் என்று மூன்று நிகழ்ச்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன. முன்னைய பாடலில் 'படகில் தனியே வந்தான்' எனக் குகன் வந்ததாக முடித்திருப்பதும், குகனே பரதனைத் 'திசை நோக்கித் தொழுகின்றானாகக்' கண்டு கூறுவதும் இப்பாடற் பொருளைத் தெளிவு செய்கின்றன. எதிரே தொழுதானை என்பது பரதனை எனவும், வணங்கினான் குகன் எனவும் ஆகிறது. வணங்குதலாகிய குகன் செயலை அடுத்து நிகழ்வது பரதன் செயலாகும் அன்றோ. 'மலர் இருந்த அந்தணனும் தனை வணங்கும் அவனும்' என்பது பரதனைக் குறித்தது. அப்பரதன் அவன் (குகன்) அடியில் வீழ்ந்தான் என ஆற்றொழுக்காக முடிந்தது. பரதன் 'மன் முன்னே தழீஇக் கொண்ட மனக்கு இனிய துணைவன்' எனக் குகனைக் குறித்து 'என் முன்னே' என்று தனக்குத் தமையனாகவும் கொண்டான்; அதுவும் அன்றி, 'இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான்' (2367) என்று பின்னால் தாயருக்கும் அவ்வாறே அறிமுகம் செய்விக்கிறான். ஆகவே, அண்ணன் காலில் தம்பி விழுவதே முறை எனக் கருதி அடி வீழ்ந்தான் பரதன் என்க. தன்னடியில் வீழ்ந்த பரதனைக் குகன் குகனைத் 'தகவுடையோர் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்' என்று கம்பர் கூறுவது சிந்திக்கத்தக்கது. பிறப்பால் வேடனாகிய குகன் தன்னடி வீழும் பரதனைத் தந்தைநிலையில் இருந்து தழுவினான் என்பதை ஏற்புடைத்தாக்கவே சிறப்பால் மேலானோர் மனத்திலும், தலையிலும் ஏற்றிப் போற்றும் குணங்களால் உயர்ந்த புகழ் உடையவன் என்று குகனை நமக்குக் காட்டினார் கம்பர். இனி, இதனையும் பரதன் மேற்றாகவே கொண்டு கூறுவாரும் உளர். அது ஏற்புடைத்தாகுமேல் அறிந்து கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming up, he bowed to the one who stood before him with folded hands; and he
  2. to whom even the Brahmin seated on the lotus bows fell at that man's feet;
  3. and with more joy than a father, he embraced him — he whose glory
  4. sits enthroned in the minds and on the heads of the worthy.

What the poem says

The two men meet. Paratan stands with his palms joined in greeting, and Kukaṉ bows to him. Then Paratan, a prince so great that even Piramaṉ, the creator seated on the lotus, would bow to him, throws himself at the hunter's feet, because he now counts Kukaṉ as an elder brother.

Kukaṉ lifts him and holds him to his chest with more joy than a father. By birth he is only a forest hunter, but the poet says his goodness has earned him a place in the hearts of the wise and on their heads, which makes it fitting for him to embrace Paratan like a father.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantu, etirē toḻutāṉai vaṇaṅkiṉāṉ; malar irunta
antaṇaṉum taṉai vaṇaṅkum avaṉum, avaṉ aṭi vīḻntāṉ;
tantaiyiṉum kaḷikūrat taḻuviṉāṉ, takavu uṭaiyōr
cintaiyiṉum ceṉṉiyiṉum vīṟṟirukkum cīrttiyāṉ.