கம்பராமாயணம் 2413 · அயோத்தியா 11.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உயர்த்த உத்தமக் குணங்களையும், வலிமையான தோளையும் உடைய பரதனே!; ஏழை எயினனேன் - அறிவில்லாத வேடனாகிய யான்; என் புகழ்கின்றது? - எவ்வாறு புகழ முடியும், இரவி என்பான் தன் - சூரியன் என்று சொல்லப்படுகிறவனது; புகழ்க் கற்றை - புகழாகிய ஒளித்தொகுதி; மற்றை ஒளிகளைத் தவிர்க்குமா போல் - மற்றைக் கோள்கள், உடுக்களின் ஒளிகளையெல்லாம் அடக்கிக் கீழ்ப்படுத்தித் தான் மேற் சென்றுள்ளவாறு போல; மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் - எல்லா அரசர்களாலும் பாராட்டப்பெறும் பெருமை படைத்த உங்கள் சூரிய வம்சத்து முன்னைய அரசர்களது எல்லாப்புகழ்களையும்; உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் - உனது புகழுக்கும் அடங்குமாறு செய்துகொண்டுவிட்டாய்.
'ஏழை எயினன்' - குகன் தன்னடக்கமாகக் கூறிக்கொண்டான். சூரியனுக்குப் புகழ் என்பது ஆதலின் அதனைப் 'புகழ்க்கற்றை' என்றார். மரபினோர் புகழ்கள் முன்பு பேசப்பட்டன; இனி, பரதன் புகழே பேசப்படும் என்பதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- How can I, an ignorant hunter, praise you? Just as the one called the Sun
- with the mass of his glorious rays puts out every other light,
- so all the fame of your line, whose greatness kings praise,
- you have made into your own fame, you of high virtue and mighty shoulders!
What the poem says
Kukaṉ humbly calls himself an ignorant hunter, unfit to praise Paratan. Yet he finds an image: as the sun's blaze hides every planet and star, Paratan's glory has swallowed the fame of all the great kings of the Solar line before him.
From now on, the commentary says, people will talk only of Paratan.