கம்பராமாயணம் 2414 · அயோத்தியா 11.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புனை கழல் - அலங்கரிக்கப் பெற்ற வீரக்கழலை அணிந்த; புலவு வேற்கை - புலால் மணம் வீசும் வேலைப் பிடித்த கையை உடைய; புளிஞர் கோன் - வேடர் தலைவனாகிய குகன்; என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி - என்று இதுபோன்ற பொருந்திய சொற்கள் பலவற்றையும் சொல்லி; பொரு இல் காதல் அனையவற்கு - இராமன்பாலும் அதனால் தன்பாலும் ஒப்பற்ற பேரன்பினை உடையனாகிய பரதனுக்கு; அமைவின் செய்தான் - பொருந்திய நல்லுபசரிப்புகளைத் தகுதியாகச் செய்தான்; அவற்கு அன்பு இலாதார் யார் - அப்பரதனிடத்தில் அன்பு செலுத்தாதவர் யார் உளர்?; இராமன் மேல் நிமிர்ந்த காதல் - இராமனிடத்து மேல் சென்று உயர்ந்த அன்பு (அவன் சக்கரவர்த்தித் திருமகன் என்பதாலா? அன்று); நினைவு அருங் குணம்கொடு அன்றோ - நினைக்கவும் முடியாத நற்குணங்களின் நிலையமாக அவன் இருந்தான் என்பதனால் அல்லவா? (அக்குணங்கள் இவன்பாலும் இருத்தலால் இவனிடமும் அன்பு நிமிர்ந்தது.)
'அமைவின் செய்தான்' என்பது பரதன் தகுதிக்கும், அவன் குணநலத்துக்கும், அப்போதைய துக்கத்துக்கும் ஏற்ற வகையில் வழுவாது உபசரித்தான் குகன் என்பதைக் காட்டும். இராமனிடத்து எந்தக் குணங்களைக் கண்டு குகன் அன்பு செலுத்தினானோ அதே குணங்கள் இவன்பாலும் இருத்தலின் இவனிடத்தும் அந்த அன்பு கண்ட அளவிலே உண்டாயிற்று என்றார். இங்கு “எள்ளரிய குணத்தாலும் எழிலாலும் இவ்விருந்த வள்ளலையே அனையானைக் கேகயர் கோன் மகள் பயந்தாள்” (657.) என்பதனைக் கருதுக. 'பொரு இல் காதல்' என்பதனைக் குகன்மேல் ஏற்றி உரைப்பதும் உண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Speaking many such fitting words as these,
- the lord of the hunters, with his ornate anklet and his flesh-scented spear in hand,
- did all that was fitting for the one of peerless love. Who could fail to love him?
- Was it not for his virtues beyond imagining that love for Irāmaṉ rose so high?
What the poem says
After saying many such words, Kukaṉ, anklet on his foot and hunter's spear in hand, receives Paratan with every courtesy his rank and his grief deserve.
The poet then speaks in his own voice. Who would not love Paratan? People love Irāmaṉ not because he is the emperor's son but because of his unimaginable goodness, and Paratan has the same goodness, so the same love rises for him at first sight.