கம்பராமாயணம் 2415 · அயோத்தியா 11.38

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'

பொருள் · Meaning in Tamil

அருள் தரு வாரி அன்ன - கருணைப் பெருங்கடலை ஒத்த; செவ்வழி உள்ளத்து அண்ணல் - நேரிய வழியிற் செல்லும் மனத்தை உடைய பரதன்; அவ் வழி - அப்போது; அவனை நோக்கி - குகனைப் பார்த்து; தென்திசைச் செங்கை கூப்பி - இராமன் சென்றுள்ள தென்திசையைப் பார்த்துத் தன் சிவந்த கைகளைக் குவித்து வணங்க; “நம்முன் - நம்முடைய அண்ணன்; எவ்வழி உறைந்தான்?” - எந்த இடத்தில் தங்கியிருந்தான்?, என்றலும் - என்று கேட்டவுடனே; எயினர் வேந்தன் - வேட அரசனாகிய குகன்; “வீர! - வீரனே!; இவ் வழி - இவ்விடத்தில், யானே காட்டுவல் - நானே (அவ்விடத்தை உனக்குக்) காண்பிப்பேன்; எழுக” - என்னுடன் புறப்படுவாயாக, என்றான் -.

'தென் திசைச் செங்கை கூப்பி' - 'திசை நோக்கித் தொழுகின்றான்' (2332.) என முன்னர் வந்ததும் காண்க. 'இவ்வழி' என்பதற்கு 'இந்த இடமாகும்' என்று குகன் அவ்விடத்தையும் காட்டிச் சுட்டிச் சொல்லியதாக முடித்துக் காட்டலும் ஒன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then, looking at him, the noble one whose heart kept to the straight path,
  2. like an ocean that pours out grace, joined his red hands toward the south
  3. and asked, 'Where did our elder brother stay?' and the king of the hunters
  4. said, 'Here, hero! I myself will show you; come.'

What the poem says

Paratan, compassionate and upright, folds his hands towards the south, where Irāmaṉ went, as he does again and again. He asks Kukaṉ where his elder brother spent the night here.

Kukaṉ offers to take him to the place himself. "Here" may also mean that Kukaṉ points to the very spot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vaḻi avaṉai nōkki, aruḷ taru vāri aṉṉa
cev vaḻi uḷḷattu aṇṇal, teṉ ticaic ceṅ kai kūppi,
'ev vaḻi uṟaintāṉ nammuṉ? ' eṉṟalum, eyiṉar vēntaṉ,
'iv vaḻi vīra! yāṉē kāṭṭuval; eḻuka ' eṉṟāṉ.