கம்பராமாயணம் 2416 · அயோத்தியா 11.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(குகன் காட்டிய இடத்துக்குப் பரதன்) கார் எனக் கடிது சென்றான் - மேகம் போல விரைவாகச் சென்று; வார் சிலைத் தடக்கை வள்ளல் - கட்டமைந்த வில்லேந்திய நீண்ட கைகளை உடைய இராமன்; வைகிய - தங்கியிருந்த; கல்லிடைப் படுத்த புல்லின் பள்ளி - கற்களின் இடையே பரப்பப்பெற்ற புல்லால் ஆகிய படுக்கையை; கண்டான் - பார்த்து; பார்மிசை - பூமியின் மேல், பதைத்து - துடித்து; வீழ்ந்தான் - விழுந்து; பருவரல் பரவை புக்கான் - துன்பம் எனும் கடலில் புகுந்து; வார் மணிப் புனலால் - பெருகுகின்ற முத்துமணி போன்ற கண்ணீரினால், மண்ணை - பூமியை, மண்ணு நீர் ஆட்டும் - திருமஞ்சனத் தண்ணீரால் குளிப்பாட்டுகின்ற, கண்ணான் - கண்ணுடையவனாக ஆனான்.
பரதன் மனத்தின் பதைபதைப்பும், அதனால் ஏற்பட்ட துன்பமும், அதன்வழி உண்டாகின்ற கண்ணீர்ப்பெருக்கும் மிகுந்த படியைக் கூறினார். இராமபிரான் வைகிய இடத்தைத் திருமஞ்சனம் ஆட்டினான் என்பது போலக் கூறியது கவிநயம் - “மண்ணக மடந்தையை மண்ணுநீர் ஆட்டி” (பெருங். 1-49-89) என்பது போல. 'கார் என' என்கின்ற உவமை பரதனது திருமேனிநிறம், அவன் விரைந்து சேறல், பின் நீர்பொழிதல் (கண்ணீர் ஆகிய அனைத்துக்கும் பொருந்துதல் அறிந்து மகிழத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Swift as a rain cloud he went; and he saw the bed of grass laid among the stones
- where the generous one, with the long bow in his great hand, had lain;
- he fell trembling to the earth; he plunged into a sea of sorrow;
- his eyes bathed the ground with streaming, pearl-like water, as in a sacred ablution.
What the poem says
Paratan hurries like a rain cloud to the spot and sees the grass bed Irāmaṉ slept on, spread among the stones. He collapses, shaking, and drowns in grief. His tears pour down like pearls, as if he were giving the holy ground a ritual bath.
The rain-cloud image fits him three ways: he is dark like a cloud, he moves fast like one, and he pours water like one.