கம்பராமாயணம் 2417 · அயோத்தியா 11.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உனக்கு இவ் இடர் என்பொருட்டினால் இயன்றது என்ற போழ்தும் - (இராம!) உனக்கு இவ் வனவாசமாகிய துன்பம் என்காரணமாக உண்டாகியது என்று அறிந்த அந்தநேரத்திலும்; (அதன் பிறகு) கிழங்கும் காயும் அமுது என அயின்றனை - கிழங்கு, காய் முதலியவற்றை (அரண்மனையில் இருந்து உண்ணும்) அமுது போல உண்டாய்; அரிய புல்லில் துயின்றனை - உறங்குதற்கு இயலாத புற்படுக்கையில் உறங்கினாய்; எனவும் - என்று அறிந்த இந்த நேரத்திலும்; யான் ஆவி துறந்திலென் - யான் உயிர் போகப் பெற்றேன் இல்லை, (அம்மட்டேற; சுடரும் காசு குயின்று உயர் மகுடம் - ஒளி விடும் பொன்னாற் செய்யப்பெற்று உயர்ந்த திருமுடியை; சூடும் செல்வமும் கொள்வேன் - சூட்டிக்கொள்ளும் அரசச் செல்வத்தையும் ஏற்றுக் கொள்வேன் போலும்.
பரதன் தன்னைத் தானே நொந்து உரைத்துக்கொள்வதாகக் கொள்க. தன்னால்தான் இத்தகைய துன்பங்கள் இராமனுக்கு உண்டாகின என்று நைகிறான். அரண்மனையில் உண்பது அமுது ஆதலின் வனத்தில் உண்ணும் கிழங்கும் காயும் அமுதாயின. இன்னும் உயிர் வைத்திருப்பதும் உயிர் போகாமல் இருப்பதும் அரசுச் செல்வத்தையும் அநுபவிக்கவோ என்று நொந்து உரைத்தானாம். 'ஏ'காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even when I learned that this suffering came upon you for my sake,
- and that you ate roots and raw fruit as if they were nectar, and slept
- on a bed of grass where sleep is hard — even then I did not give up my life;
- no doubt I shall also take the wealth of wearing a tall crown wrought of shining gold!
What the poem says
Lying by the grass bed, Paratan turns on himself. He knew Irāmaṉ's suffering was caused on his account. Now he sees that his brother ate forest roots and fruit as if they were palace food and slept on grass. And still he has not died of grief.
With bitter irony he asks whether he is going to finish the job by putting on the jewelled crown and enjoying the kingdom as well.