கம்பராமாயணம் 2418 · அயோத்தியா 11.41

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

தூண்தர - தூணை ஒப்பாக; நிவந்த தோளான் - உயர்ந்த தோள்களை உடைய பரதன்; பின்னரும் சொல்லுவான் - மீண்டும் குகனைப் பார்த்துப் பேசுவான்; “அந்நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் - அந்த நெடியவனாகிய இராமன் உறங்கிய இடம் இது என்றால்; நிமிர்ந்த நேயம் பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன் - (அவ் இராமனிடத்தில்) மேற்சென்ற மிகுந்த அன்பு கொண்டு அவனைத் தொடர்ந்து அவன் பின்னேயே வந்தவனாகிய இலக்குவன்; பொழுது நீத்தது - இரவுப் பொழுதைக் கழித்தது; யாண்டு?” - எவ்விடத்தில்?; என - என்று; இனிது கேட்டான் - இனிமையாக வினாவினான்; எயினர்கோன் - வேட வேந்தனாய குகன்; இதனைச் சொன்னான் - இந்த விடையைக் கூறினான்.

நெடியோன் என்று இராமனைப் பலவிடங்களிலும் கம்பர் குறிப்பர். அதனால் நீண்டவன் என்றார். நிமிர்தல் மேல் செல்லுதல் ஆதலின் உயர்ந்த அன்பு என்றாகும். இலக்குவனைப்பற்றி வினாவுகிறபோது பரதனுக்கு ஏற்படும் உள்ள நெகிழ்வைப் புலப்படுத்தவே 'இனிது கேட்டான்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He whose shoulders rose like pillars spoke again: 'If this is the spot
  2. where that tall one slept, then he who bore a love that rose so high,
  3. who followed close behind him — where did he
  4. pass the night?' So he gently asked; and the lord of the hunters told him this.

What the poem says

Paratan's next question is about Ilakkuvaṉ, the brother whose love was so great that he followed Irāmaṉ into exile. If this is where Irāmaṉ slept, where did Ilakkuvaṉ sleep?

He asks "gently", and the commentary takes the word to show how tender Paratan feels towards Ilakkuvaṉ. Irāmaṉ is called "the tall one", an epithet that also recalls Vishnu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūṇtara nivanta tōḷāṉ piṉṉarum colluvāṉ, 'an
nīṇṭavaṉ tuyiṉṟa cūḻal itueṉiṉ, nimirnta nēyam
pūṇṭavaṉ, toṭarntu piṉṉē pōntavaṉ, poḻutu nīttatu
yāṇṭu? ' eṉa iṉitu kēṭṭāṉ; eyiṉarkōṉ itaṉaic coṉṉāṉ.