கம்பராமாயணம் 2427 · அயோத்தியா 11.50

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி ,
வங்கம் நீர் கடலும் வந்து தன் வழிப் படர , மானப்
பொங்கு வெம் களிறு நூக்கக் கரை ஓரீஇப் போயிற்று ; அம்மா !
கங்கையும் இராமற் காணும் காதலது என்ன மாதோ .

பொருள் · Meaning in Tamil

மானம் - பெருமை பொருந்திய; பொங்கு - மேல்கிளம்பிய; வெங்களிறு - கொடிய யானைகள்; நூக்க - தள்ளுதலால், சங்கமும் மகரமீனும் தரளமும் மணியும் தள்ளி - சங்கு, சுறாமீன், முத்து, மணிக்கற்கள் ஆகியவற்றைத் தள்ளி; வங்க நீர்க் கடலும் - மரக்கலங்களையுடைய நீர்மிகுந்த கடலும்; தன்வழி வந்து படர - தன்னிடத்து வந்து பரவும்படி; கங்கை - கங்கா நதியும்; இராமன் காணும் காதலது என்ன - இராமனைக் காணும் அன்பு மீக்கூர்ந்தது என்னும்படி, கரை ஒரீஇப் போயிற்று - கரை கடந்து சென்றது.

யானைகள் கங்கையில் நீந்தித் தென்கரை செல்லும்போது, கங்கைத் தண்ணீர் தள்ளப்பட்டுக் கரைக்கு மேலே பரவி யானைகளுக்கு முற்பட்டுத் தென் கரை அடைவது, கங்கையே இராமனைக் காணும் காதலால் செல்வது போன்றது என்று தற்குறிப்பேற்றம் செய்தார். தற்குறிப்பேற்றவணி. அம்மா வியப்பிடைச் சொல். மாது, ஓ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Pushing out conch shells, sharks, pearls and gems,
  2. so that even the ship-bearing sea came flooding up its course, as the proud,
  3. fierce, surging elephants thrust against it, it left its banks and went on — ah!
  4. as if the Gaṅgā too were longing to see Irāmaṉ.

What the poem says

So many great elephants push into the river that its water is shoved up over the southern bank, as if the sea itself, with its shells, sharks, pearls and gems, had been driven up the channel.

The poet pretends the river has its own reason for spilling over. The Gaṅgā too longs to see Irāmaṉ and is hurrying ahead of the army to reach him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1caṅkamum makara mīṉum taraḷamum maṇiyum taḷḷi,
vaṅka nīrk kaṭalum vantu taṉ vaḻip paṭara, māṉap
poṅku veṅ kaḷiṟu nūkkak karai orīip pōyiṟṟu; ammā!
kaṅkaiyum irāmaṟ kāṇum kātalatu eṉṉa mātō.