கம்பராமாயணம் 2426 · அயோத்தியா 11.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இன மழை - கூட்டமான மேகங்கள்; இடிபடு முழக்கம் பொங்க - ஒன்றுடன் ஒன்று மோதுவதால் உண்டாகிய முழக்க ஒலி அதிகரிப்ப; ஊழி இறுதியின் - யுகப்பிரளயகாலத்தே; மகர நீரை - கடல் நீரை; முடிவு உற முகப்ப - அடியோடு வற்றும்படி மொண்டு உண்பதற்காக; மொய்ப்ப போல - நெருங்கி யுள்ளவை போலவும்; கொடியோடு வங்கம் - கொடியோடு கூடிய கப்பல்; வேலை - கடலின்கண்; கூம்பொடு - பாய்மரத்தோடு; படர்வ போல - செல்வன போலவும்; நெடுங்கை வேழம் - நீண்ட துதிக்கையை உடைய யானைகள்; நெடிய கை எடுத்து நீட்டி - தமது நீண்ட துதிக்கையை உயரத் தூக்க; நீந்தின - (கங்கையில்) நீந்திச் சென்றன.
மகரம் என்பது சுறாவைக் குறிக்கும். அதனை உடைய நீர் எனவே கடல் ஆயிற்று. கங்கையில் நீந்திச் செல்லும் யானைகளுக்கு இரண்டு உவமைகள் கூறினார் - ஊழிக்காலத்து மேகங்கள் ஒன்றாய்க் கடல்நீரை வற்றக் குடிப்பன போலவும், கப்பல் பாய்மரத்துடன் கடலில் செல்வது போலவும் என.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like massed clouds with thunder swelling, crowding in
- to scoop up the shark-filled sea until it is gone, at the end of an age,
- like flagged ships moving on the ocean with their masts,
- the long-trunked elephants swam, raising and stretching out their long trunks.
What the poem says
The elephants do not go by boat. They swim the Gaṅgā with their trunks held high above the water.
The poet gives two images. They are like the dark, thundering clouds that gather at the end of an age to drink up the whole ocean. And with their raised trunks they are like ships sailing with their masts and flags.