கம்பராமாயணம் 2425 · அயோத்தியா 11.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குரிசிலது ஏவலால் - பரதனது கட்டளையால், அக் குரகதத் தேர்வலானும் - குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தலில் வல்ல அச்சுமந்திரனும்; வரிசையின் வழாமை நோக்கி - முறைப்படி தவறாமல் பார்த்து; மரபுளி வகையின் ஏற்ற - அவரவர்க்குள்ள மரபுகளின்படி (படகுகளில் ஏற்றியனுப்ப, கரி, பரி, இரதம், காலாள் - யானை, குதிரை, தேர் வீரர் என்று சொல்லப்பெறும்; கணக்கு அறு - எண்ணிக்கையில் அளவுபடாத; கரை இல் வேலை - கரையற்ற சேனைக் கடல், எறிமணி திரையின் வீசும் - ஒளிவீசும் மணிகளை அலைகளால் (கரைக்கண்) எறிகின்ற; கங்கை யாறு - கங்கையாற்றை, ஏறிற்று - கடந்து அக்கரை சென்று ஏறியது.
முன்செல்வார் பின்செல்வார் என்ற முறையும், நாவாயில் முன் அமர்வோர் பின் அமர்வோர் இருப்போர் நிற்போர், தனித்து ஏற்றப்படுவோர், குழுவாக ஏற்றப்படுவோர் என உள்ள எல்லாம் அடங்க, 'வரிசையின் வழாமை' என்றும், 'மரபுளி வகையின்' என்றும் கூறினார். சேனைக்கடல் யாறு ஏறிற்று என்றது ஒரு நயம். அன்றே என்றது வியப்புக் குறித்து வந்தது. அன்று; 'ஏ' அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At the prince's command, that master of the horse-drawn chariot too,
- seeing that no rank was out of order, put them aboard in their due ways;
- and the shoreless sea of elephants, horses, chariots and foot soldiers beyond count
- crossed the Gaṅgā, whose waves fling up bright gems — wondrous!
What the poem says
Cumantiraṉ, the master charioteer, organises the crossing carefully. Each group boards in its proper order and place: who goes first and who later, who sits and who stands, who travels alone and who in a company.
So the countless army of elephants, horses, chariots and infantry crosses the Gaṅgā. The poet enjoys the paradox of a "sea" climbing over a river.