கம்பராமாயணம் 2424 · அயோத்தியா 11.47

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'

பொருள் · Meaning in Tamil

சிருங்கிபேரியர் கோன் - சிருங்கிபேரம் என்னும் நகரில் உள்ளார்க்கு அரசன் ஆகிய குகன்; (பரதனை நோக்கி) “வரிசிலைக் குரிசில் மைந்த - கட்டமைந்த வில் தொழிலிற் சிறந்த தயரத குமாரனாகிய பரதனே!; வரம்பு இல் நாவாய் வந்தன - கணக்கில்லாத படகுகள் வந்துள்ளன; சிந்தனையாவது” - (உன்) மனக்கருத்து என்ன?; என்று செப்ப - என்று சொல்ல; சுந்தர வரிவில்லானும் - அழகிய கட்டமைந்த வில்லானாகிய பரதனும்; சுமந்திரன் தன்னை நோக்கி - (மதியமைச்சருள் மூத்தோனாகிய) சுமந்திரனைப் பார்த்து; “எந்தை - என் தந்தையே!; இத்தானை தன்னை - இச்சேனைகளை; விரைவின் ஏற்றுதி” - விரைவாகப் படகில் ஏற்றுக; என்றான் - என்று சொன்னான்.

சிருங்கிபேரம் என்பது குகனது நாட்டின் தலைநகரம். 'வரிசிலைக் குரிசில்' என்று தயரதனைக் கூறியதற்கேற்பச் 'சுந்தர வரிவிலானும்' என்று இப் பாடலிலேயே பரதனைக் குறிப்பிட்டது ஒரு நயம். சுமந்திரன் தேர் ஓட்டுதலில் வல்லவன்; அமைச்சன்; தயரதனுக்கு மிகவும் அணுக்கமானவன். ஆதலின், அவனைத் தன் தந்தையெனவே கொண்டு கூறினான் பரதன். எந்தை - அண்மைவிளி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Boats beyond number have come; son of the lord of the banded bow,
  2. what is your wish?' said the king of the people of Ciruṅkipēram;
  3. and he of the beautiful banded bow, looking at Cumantiraṉ,
  4. said, 'My father, put this army on board, quickly.'

What the poem says

Kukaṉ is lord of Ciruṅkipēram, his capital on the Gaṅgā. He tells Paratan that boats beyond counting have arrived and asks what he wants done.

Paratan turns to Cumantiraṉ, his late father's charioteer and closest minister, and calls him "my father", a mark of his respect for the old man. He asks him to load the army onto the boats without delay.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vantaṉa varampu il nāvāy; vari cilaik kuricil mainta!
cintaṉai yāvatu? ' eṉṟu ciruṅkipēriyarkōṉ ceppa
cuntara vari vilāṉum cumantiraṉtaṉṉai nōkki,
'entai! it tāṉaitaṉṉai ēṟṟuti, viraiviṉ ' eṉṟāṉ.