கம்பராமாயணம் 2423 · அயோத்தியா 11.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நங்கையர் நடையின் - பெண்கள் நடைபோன்ற நடையையும்; அன்னம் நாணுறு செலவின் - அன்னப் பறவைகள் நாணப்படும் படியான நீரிற் செல்லுதலும் உடைய, நாவாய்; அங்கொடு இங்கு - அக்கரையில் உள்ளாரை இக்கரையிலும்; இழித்தி ஏற்றும் அமைதியின் - ஏற்றி இறக்கும் தன்மையினால்; அமரர் வையத்து அங்கொடு - தேவருலகமாகிய அவ்வுலகத்தோடு; இங்கு - இவ்வுலகில் உள்ளாரை; இழித்தி ஏற்றும் - ஏற்றி இறக்கும்; இருவினை - புண்ணியம், பாவம் என்னும் இருவினை; என்னல் ஆன - என்று சொல்லும்படியாக இருந்தனவாய்; கங்கையும் இடம் இலாமை மிடைந்தன - கங்கா நதியிலும் இடம் இல்லை என்னும்படி நெருங்கின; எங்கும் கலந்தன - எல்லா இடங்களிலும் சேர்ந்தன.
'அங்கொடு இங்கு' என்று பொதுவாகக் குறிப்பிடினும், கங்கையின் வடகரை நின்று தென்கரைக்குச் சேறலே இங்கு வேண்டப்படுதலின் வடகரையில் ஏற்றித் தென்கரையில் இறக்குதலே இங்கு உண்டு; தென்கரையில் ஏறுவார் இலர் ஆதலின், புண்ணியம் மிக்கார் பூவுலகில் நின்று அமரருலகு ஏறலும், புண்ணியம் அநுபவித்துத் தொலைத்த பிறகு மீண்டும் பாவத்தை அநுபவிக்க மண்ணுலகு சேறலும் ஆகியவற்றுக்கு இருவினை காரணமாக ஆதலின் இருவினைகளே மேலும் கீழும் ஏற்றி இறக்குவ என்பது கொண்டு அவற்றை நாவாய்களுக்கு உவமை ஆக்கினார். 'இழித்தி ஏற்றும்' என்பது 'ஏற்றி இழித்து' என மாற்றி உரைக்கப்பெற்றது. இனி தென்கரையில் நின்று வடகரையில் இறங்குவார் உளராயின் இருதலையும் கொள்ளுதலும் ஒன்று. அது உவமையோடு முழுதும் பொருந்திற்றாம். நாவாய்களின் நடை நங்கையர் நடை போன்றது. செல்கை அன்னம் நாணப்படும்படி உள்ளது என்க; மெல்ல மெல்ல, அசைந்து செல்லுதலால். “அன்னப்பேட்டை சிறை இலதாய்க் கரை, துன்னிற்றென்னவும் வந்தது தோணியே” (2372.) என்றதும் நோக்குக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The boats, with a gait like that of women, moving so that swans felt shame,
- crowded together till even the Gaṅgā had no room, and spread everywhere;
- taking people on there and setting them down here, they were like
- the two kinds of deeds that lift people from here to the world of the gods and bring them down again.
What the poem says
The boats fill the whole river, gliding along with the swaying gait of women, so gracefully that swans feel outdone.
As they carry people on at one bank and set them down at the other, the poet compares them to the two kinds of karma, merit and sin. Merit lifts souls from earth to heaven; when it is used up, sin brings them back down to be born again.