கம்பராமாயணம் 2422 · அயோத்தியா 11.45

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நன்று ' எனப் புளிஞர் வேந்தன் நண்ணினன் தமரை ; 'நாவாய்
சென்று இனி தருதிர் ' என்ன , வந்தன ; சிவன் சேர் வெள்ளிக்
குன்றெனக் குனிக்கும் அம்பொற் குவடு என குபேரன் மானம்
ஒன்று என நாணிப் பல வேறு உருவு கொண்டனைய ஆன .

பொருள் · Meaning in Tamil

(பரதன் கூறியது கேட்டு) புளிஞர் வேந்தன் - வேடர் வேந்தனாய குகன்; “நன்று” - நல்லது (அவ்வாறே செய்வேன்) என்று சொல்லி; தமரை நண்ணினன் - தன் இனத்தவரை அடைந்து; 'சென்று இனி நாவாய் தருதிர்' என்ன - (நீங்கள்) சென்று இனிமேல் படகுகளைக் கொண்டு வருக என்று சொல்லிவிட; (நாவாய்கள் சிவன் சேர் வெள்ளிக் குன்று என - சிவபெருமான் வீற்றிருந்து அருளும் (திருக்கயிலாயம் எனப்பெறும்) வெள்ளிமலை போல, குனிக்கும் அம்பொன் குவடு என - (அச்சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில்) வளைத்த (மகா மேரு மலையாகிய) பொன்மலை போல; குபேரன் மானம் என - (வடதிசைக்கு அதிபனாகிய) குபேரனது புஷ்பக விமானம் போல; ஒன்று என நாணி - (இவையெல்லாம்) தாம் ஒன்றாய் இருப்பதற்கு வெட்கமுற்று; பல்வேறு உருவு கொண்டனைய ஆன - அவை தாமே ஒவ்வொன்றும் பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொண்டாற்போன்றவையாகிய நாவாய்கள்; வந்தன - (கங்கையின் கண்) வந்து சேர்ந்தன.

பல்வேறு வடிவும் நிறமும் பருமையும் உடைய படகுகளை வெள்ளிமலை, பொன்மலை, புஷ்பக விமானம் பல்வேறு வடிவுகொண்டு வந்துள்ளதாகக் கற்பனை செய்தார்; இது தற்குறிப்பேற்றம் உவமையணியுடன் வந்தது. 'குபேரன் மானம் என' என்று 'என'வைப் பிரித்துக் கூட்டுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Good,' said the king of the hunters, and went to his people: 'Go now
  2. and bring the boats,' he said, and they came — as if Śiva's silver
  3. mountain, the fair golden peak that he bent as a bow, and Kubēra's aerial car,
  4. ashamed of being only one each, had taken on many different forms.

What the poem says

Kukaṉ agrees and orders his people to bring the boats. They arrive in every size, shape and colour.

The poet imagines that Kailāsa, the silver mountain where Śiva lives, Mēru, the golden mountain Śiva bent as a bow to destroy the three flying cities, and Kubēra's flying chariot were each embarrassed to exist as only one, and so turned themselves into this crowd of boats, some silver-white, some golden, some like flying palaces.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'naṉṟu ' eṉap puḷiñar vēntaṉ naṇṇiṉaṉ tamarai; 'nāvāy
ceṉṟu iṉit tarutir ' eṉṉa, vantaṉa; civaṉ cēr veḷḷik
kuṉṟu eṉa kuṉikkum am poṉ kuvaṭu eṉa kupēraṉ māṉam
oṉṟu eṉa nāṇip pal vēṟu uruvu koṇṭaṉaiya āṉa.