கம்பராமாயணம் 2421 · அயோத்தியா 11.44

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அண்ணல் தானும் - பரதனும்; அவ் இடை - அந்த இடத்தில்; அன்று - அன்றையிரவு; அரும்பொடியின் வைகி - தற்குதற்கியலாத புழுதி மண்ணில் தங்கியிருந்து, (பொழுது விடிந்ததும்); “தெவ் இடைதர - பகைவர்கள் தோற்றோடும்படி; நின்று ஆர்க்கும் செறிகழல் - தங்கி ஒலிக்கும் கட்டப்பட்ட வீரக்கழல் அணிந்த; புளிஞர் கோமாஅன்! - வேடர்களுக்கு அரசனாகிய குகனே! இவ் இடை - இந்த நேரத்தில்; கங்கை ஆற்றின் - கங்கை ஆற்றிலிருந்து; எம்மை ஏற்றினை ஆயின் - எம்மைக் கரையேற்றித் (தென்கரை சேரச் செய்தால்; வெவ் இடர்க்கடல் நின்று ஏற்றி - கொடிய துயரக் கடலிலிருந்து கரையேற்றி, வேந்தன்பால் விடுத்தது” - இராமன்பால் அனுப்பியது ஆகும்; என்றான் - என்று சொன்னான். இவ் இடை என்பது காலம் இடமாயிற்று. இராமன் வைகிய இடம் கண்ட பரதன் அந்த இடத்திலேயே புழுதி மண்ணில் தங்கினானாம். கங்கை ஆற்றைத் தாண்டித் தென்கரை விடுதல் - துன்பக் கடலைத் தாண்டி இராமனிடம் சேர்ப்பித்ததாகும் என்றானாம். இராமனை வேந்தன், மன்னன் என்றே குறித்துச் செல்லும் பரதனது உளப்பாங்கை இங்கு அறிக. ஆற்றின் ஏற்றுதல் என்பது ஆற்றிலிருந்து கரை யேற்றுதல் என்பதனைக் குறித்தவாறாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There the noble one too spent that night lying in the harsh dust;
  2. then he said: 'Lord of the hunters, whose close-bound anklets ring out
  3. as you stand and send your foes fleeing! If you now carry us over the Gaṅgā,
  4. it will be lifting us from a sea of burning grief and sending us to the king.'

What the poem says

Paratan spends the night where Irāmaṉ slept, lying in the dust. In the morning he asks Kukaṉ to take them across the Gaṅgā.

Ferrying them over the river, he says, will be like lifting them out of a sea of grief and delivering them to the king. As always, he calls Irāmaṉ "the king".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av iṭai, aṇṇaltāṉum, aṉṟu arum poṭiyiṉ vaiki
'tev iṭaitara niṉṟu ārkkum ceṟi kaḻal puḷiñar kōmāaṉ!
iv iṭai kaṅkai āṟṟiṉ ēṟṟiṉai āyiṉ, emmai
vev iṭark kaṭal niṉṟu ēṟṟi, vēntaṉpāl viṭuttatu ' eṉṟāṉ.