கம்பராமாயணம் 2429 · அயோத்தியா 11.52

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வயிரத் தேர்கள் - வலிய இரதங்கள்; கொடிஞ்சொடு - கொடிஞ்சியுடன்; தட்டும் - தேர்த்தட்டும்; ஆழியும் - சக்கரமும்; கோத்த மொட்டும் - இணைத்த மொட்டும்; நெடுஞ்சுவர்க் கொடியும் - நீண்ட இருபக்கச் சுவர்களின் மேல் கட்டிய கொடியும்; யாவும் - பிறவற்றையும்; நெறிவரு முறையின் நீக்கி - முறைப்படியான வகையில் தனித்தனியாகப் பிரித்து; விடும் சுவல் புரவியோடும் - (கத்தரியாது) விட்டு வளர்ந்த பிடரியை உடைய குதிரையோடும்; வேறு வேறு - தனித் தனியாகப் படகுகளில் ஏற்றி அக்கரை கொண்டுசெல்லப்பட்டன. (எவ்வாறு உளது எனில்); மடிஞ்சபின் - இறந்த பிறகு (அவ்வுயிர்க்கு); உடம்பு கூட்டும் வினை என - வேறு உடம்பினைக் கூட்டுகின்ற வினைபோல; ஏற்றிச் சென்ற - ஏற்றிச் செல்லப்பட்டன.

கொடிஞ்சி - தேர் முன்னே தாமரை வடிவாக நடப்படும் உறுப்பு. தேரில் அமர்வார் கைப்பிடித்தற்குப் பயன்படும் என்க. “நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி” (புறநா. 77) என்பது காண்க. தட்டு - தேர்த்தட்டு இருக்கை என்க. அச்சும், ஆழியும் தேரின்கீழ் உள்ளவை. கோத்த மொட்டும் தேர்க் கால்களை ஒன்றோடொன்று இறுக்கிப் பிடிப்பவை. நெடுஞ்சுவர் - தேர்ப்பலகைகள். கொடி - மேல் உள்ளது. தேர்களை அவ்வாறே கொண்டு செல்ல முடியாது. ஆகையால், பிரித்துப் படகுகளில் ஏற்றி அக்கரை சென்று மீண்டும் இணைத்து உருவாக்கினர் என்க. உடம்பிலிருந்து உயிரைப் பிரித்து வேறொரு உடம்பில் அதனைச் சேர்க்கும் வினை போல என்றார். உயிர் போனபிறகு கை கால் முதலிய உறுப்புகள் பிரிந்தவழி அவற்றை மீண்டும் ஒன்று சேர்ந்து உடம்பினைச் செய்யும் ஸந்தானகரணியென்னும் வித்தையையே ஈண்டு வினை என்பாரும் உளர். 'சென்ற' என்பது தேர்கள் என்பதற்கு ஏற்பச் 'செல்லப்பட்டன' எனச் செயப்பாட்டு வினையாகப் பொருள் உரைக்கப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lotus-shaped rail and the platform, the axle and the wheels, the pins that bind them,
  2. the flags on the long side-walls, all of it they took apart in proper order,
  3. and loaded piece by piece, together with the horses with their uncut manes, and took across —
  4. like the karma that joins a body together again after death — those strong chariots.

What the poem says

The chariots cannot cross whole. Each is taken apart in order, rail, seat, axle, wheels, linch-pins, side panels and flags, and loaded onto boats piece by piece with its horses, then put back together on the far bank.

The poet compares this to karma, which takes a soul out of one body at death and fits it into a new one. Some take the comparison to be a legendary art of reassembling a dismembered body and bringing it back to life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭiñcoṭu taṭṭum accum āḻiyum kōtta moṭṭum
neṭuñ cuvark koṭiyum yāvum neṟi varu muṟaiyiṉ nīkki,
viṭum cuval puraviyōṭum vēṟu vēṟu ēṟṟic ceṉṟa
maṭiñcapiṉ uṭampu kūṭṭum viṉai eṉa vayirat tērkaḷ.