கம்பராமாயணம் 2430 · அயோத்தியா 11.53

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பால் திரண்டனைய மெய்ய - பால் திரண்டாற்போன்ற (வெள்ளிய) உடம்பை உடையன; பயம் திரண்டனைய நெஞ்ச - அச்சம் திரண்டாற் போன்ற (இடுககிடும்) மனம் உடையன; கால் திரண்டனைய கால - காற்று ஒன்றுகூடினாற் போன்ற (வேகமாகச் செல்லும்) காலினை உடையன; கடுநடை - விரைந்து செல்லும் நடையை உடைய, கலினம் - சேணம் அணிந்த; பாய்மா - பாயும் குதிரைகள்; நால் இரண்டு ஆய கோடி - எட்டுக்கோடியானவை; சேல் திரண்டனைய ஆய கதியொடும் - சேல்மீன்கள் கூடிச் சென்றாற்போன்ற செலவோடும்; நவை இல் நாவாய்கள் மீது - குற்றமற்ற படகுகளின் மேலாக, நிமிரச் சென்ற - நிமிர்ந்து சென்றன.

“ஆயிரம் அம்பிக்கு நாயகன்” (1953.) என வருதலின் நால் இரண்டாய கோடி பாய்மாக்கள் என உரைக்க. புதிய இடம் கண்டால் மருளுதல் குதிரைகளுக்கு இயல்பு ஆதலின், 'பயம் திரண்டனைய நெஞ்ச' என்றார். ஓடுகின்ற பெருவெள்ள நீரில் யானைகள்போல நிலைத்து நீந்தல் குதிரைகளால் இயலாது என்பது கருதி நாவாய்கள் மீதாச் சென்றன என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Eight crores of them, on board the sound boats,
  2. went across, heads high, moving like massed shoals of carp —
  3. with bodies like gathered milk, hearts like gathered fear,
  4. legs like the gathered wind: the swift-paced, bridled, leaping horses.

What the poem says

The horses cross by boat, eighty million of them by the poet's count. Unlike the elephants, they could not swim steadily against the strong current.

Each image in the verse is built on "gathered". They are white as gathered milk, skittish as gathered fear, because horses take fright in strange places, and fast as gathered wind. Moving across the water together, they look like a shoal of fish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāl iraṇṭu āya kōṭi navai il nāvāykaḷ mītā
cēl tiraṇṭaṉaiya āya katiyoṭum nimirac ceṉṟa;
pāl tiraṇṭaṉaiya meyya, payam tiraṇṭaṉaiya neñca,
kāl tiraṇṭaṉaiya kāla, kaṭu naṭaik kaliṉap pāy mā