கம்பராமாயணம் 2431 · அயோத்தியா 11.54

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஊடு உற நெருக்கி , ஓடத்து ஒருவர்முன் ஒருவர் கிட்டிச்
சூடகத் தளிர்க்கை மாதர் தழுவினர் , துவன்றித் தோன்றப்
பாடு இயல் களி நல் யானைப் பந்தி அம் கடையின் குத்தக்
கோடுகள் மிடைந்த என்ன , மிடைந்தன குவவுக் கொங்கை .

பொருள் · Meaning in Tamil

சூடகம் - வளையல் (அணிந்த), தளிர்க் கைம் மாதர் - தளிர் போன்ற (மென்மையான) கையினை உடைய மகளிர்; ஊடு உற நெருக்கி - இடையே புகுந்து நெருங்கி நெருக்கி; ஓடத்து - நாவாய்களில்; ஒருவர் முன் ஒருவர் கிட்டி - ஒருவர்க்குமுன்னால் ஒருவர் அண்மி; குழுமினர் துவன்றித் தோன்ற - திரண்டு நெருங்கித் தோன்றுதலால்; பாடு இயல் - பெருமை பொருந்திய; களி நல் யானை - மதமகிழ்வுடைய உத்தம யானை; பந்தி - வரிசையில்; அம் கடையின் குத்த - அழகிய முனைகளால் குத்துமாறு; கோடுகள் மிடைந்த அன்ன - கொம்புகள் நெருங்கின என்று சொல்லும்படி; குவவுக் கொங்கை - (அம்மகளிரின்) திரண்ட முலைகள்; மிடைந்தன - நெருங்கின.

யானை வரிசைகளில் எதிர் எதிர் யானைத் தந்தங்களின் முனைகள் ஒன்றோடு ஒன்று குத்தி நெருங்குதல், கூட்டமான பெண்கள் வரிசை வரிசையாக நெருக்க அவர்தம் முலைகள் நெருங்கி நெருக்குதல் இங்கே ஒன்றுக்கொன்று உவமையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Squeezing in among each other, pressing close one in front of another in the boats,
  2. the women with bangles on their tender, leaf-soft hands crowded thick together,
  3. and their full breasts pressed close, as though in a row of proud, rutting elephants
  4. the tusks had crowded in, their fair points jabbing one another.

What the poem says

The women of Ayōttī cross in boats packed so tightly that they are pressed front to back.

The poet compares their crowded breasts to the tusks of bull elephants tethered in facing rows, whose tips jostle and poke into one another.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṭu uṟa nerukki, ōṭattu oruvarmuṉ oruvar kiṭṭi
cūṭakat taḷirk kaim mātar kuḻumiṉar, tuvaṉṟit tōṉṟa
pāṭu iyal kaḷi nal yāṉaip panti am kaṭaiyiṉ kuttak
kōṭukaḷ miṭainta eṉṉa, miṭaintaṉa kuvavuk koṅkai.