கம்பராமாயணம் 2432 · அயோத்தியா 11.55

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொலம் குழை மகளிர் , நாவாய்ப் போக்கின் ஒன்று ஒன்று தாக்க ,
மலங்கினர் , இரண்டு பாலும் மறுகினர் , வெருவி நோக்க ,
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர , அங்கும் இங்கும்
கலங்கின வெருவிப் பாயும் கயல் குலம் நிகர்த்த கண்கள் .

பொருள் · Meaning in Tamil

நாவாய் - (மகளிர் ஏறிச் செல்லும்) மரக்கலங்கள்; போக்கின் - செல்லும் வேகத்தில்; ஒன்று ஒன்று தாக்க - ஒன்று மற்றொன்றோடு மோத; பொலங்குழை மகளிர் - (அக்கலத்தில் உள்ள) பொன்னாலியன்ற குழை அணிந்த மகளிர்; மலங்கினர் - மனம் கலங்கி; மறுகினர் - மயங்கி; வெருவி - அச்சமுற்று; இரண்டு பாலும் நோக்க - இரண்டுபக்கமும் பார்க்க; கண்கள் - (இவ்வாறு மிரண்டு பார்க்கும் அவர்களின்) கண்கள்; அலங்கும் நீர் வெள்ளம் தள்ளி அழிதர - அசைகின்ற நீர்ப்பெருக்குத் தள்ளி நிலைகெட; அங்கும் இங்கும் கலங்கலின் - ஆற்று நீர் அங்கும் இங்குமாகக் கலங்குவதனால்; வெருவிப் பாயும் - பயந்து துள்ளுகின்ற; கயற்குலம் நிகர்த்த - மீன் கூட்டத்தை ஒத்துள்ளன.

கலத்தின் மோதலால் பயந்து மிரளும் மகளிர் கண்களுக்கு, கலம் செல்லும் வேகத்தால் தள்ளப்படும் நீரில் பயந்து துள்ளும் கயல்மீன்கள் உவமையாயின. திடுக்கெனத் தோன்றும் அச்சத்தை வெரூஉதல் என்னும் மெய்ப்பாடு என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the boats, in their passage, bumped one against another, the women with golden ear-rings
  2. were alarmed and flustered, and looked about on both sides in fear;
  3. their eyes were like shoals of carp that dart in fright
  4. when the swaying flood is pushed aside and churned up here and there.

What the poem says

In the rush of the crossing the boats knock into one another, and the women in their golden ear-rings are startled and glance anxiously from side to side.

Their darting, frightened eyes are compared to carp leaping in alarm as the boats churn up the water. Eyes are traditionally likened to the carp's shape.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1polaṅ kuḻai makaḷir, nāvāyp pōkkiṉ oṉṟu oṉṟu tākka,
malaṅkiṉar, iraṇṭu pālum maṟukiṉar, veruvi nōkka,
alaṅku nīr veḷḷam taḷḷi aḻitara, aṅkum iṅkum
kalaṅkaliṉ veruvip pāyum kayaṟkulam nikartta kaṇkaḷ.