கம்பராமாயணம் 2434 · அயோத்தியா 11.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இக் கரை - (கங்கையின்) வடகரையில் உள்ள; இரைத்த சேனை எறிகடல் - ஒலித்துக்கொண்டுள்ள சேனையாகிய அலைகடலை; வெஃகி முகந்து - விரும்பி ஏற்றுக்கொண்டு; அக்கரை - தென்கரையில்; அடைய வீசி - முழுவதும் இறக்கிவிட்டு; வறியன - ஒன்றும் இல்லாதனவாய்; அணுகும் - (வடகரை வந்து) சேரும்; நாவாய் - மரக்கலம்; அலை ஆழி புக்கு - அலை வீசும் கடலின் கண் புகுந்து; நல் நீர் - மிகுதியான நீரை; பொறுத்தன - சுமந்தனவாய்ப் (புறப்பட்டு); போக்கிப் போக - (மழைபெய்து) கழித்துக் கழித்து; அக்கணத்து - அடுத்த கணத்திலேயே; உவரி மீளும் - (மீண்டும் முகப்பதற்காகக்) கடலுக்குத் திரும்புகின்ற; அகல் மழை - அகன்ற மேகத்தை; நிகர்த்த - ஒத்திருக்கின்றன. உவமையணி. விரைவாக இறக்குதலின் 'வீசி' என்றார். “தேர்வீசு இருக்கை” (புறநா. 69) என்பது காண்க. 'நல்நீர்' என்றது மிகுதியான நீர் எனப் பொருள்படும் - 'நல்ல பாம்பு, நல்ல வெயில்' என்றார்போல. “நன்று பெரிதாகும்” என்பது (தொல். சொல். உரி. 45) காண்க. பெரிது மிகுதியாம். கடல் நீரை மேகம் முகந்து நன்னீராக்குதலின் நன்மையான நீர் என்னாமோ எனின், பொறுத்தனவாகிய நீர் ஆதலின், அது உவர்நீரே யாம் என்க. 'அம்மா' வியப்பிடைச்சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Eagerly scooping up the roaring, wave-tossed sea of the army on this bank,
- flinging it all down on the far bank, and returning empty,
- the boats were like broad clouds that enter the wave-beating ocean, take up its abundant water,
- pour it out as they go, and that very moment return to the sea — ah!
What the poem says
The boats shuttle back and forth without a pause. They pick up a load of soldiers from the "sea" of the army on the north bank, unload it all at once on the south bank, and race back empty for more.
The poet compares them to rain clouds, which draw water from the ocean, pour it out as rain, and go straight back to fill up again.