கம்பராமாயணம் 2435 · அயோத்தியா 11.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாவாய் - மரக்கலங்கள்; அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த - அகிற்கட்டைகளால் உண்டாக்கப்பெற்ற புகையைப் போன்ற அழகிய மயில் தோகைகள் கட்டப்பெற்ற; முகிழுடை முரண்மாத் தண்டு - அரும்புபோன்ற உறுப்பைத் தலையிற் கொண்ட தேரிலிருந்து பிரித்த) தண்டுகள்; கூம்பு என - பாய்மரமாகத் தோன்ற; முகிலின் வண்ணத் துகிலொடு தொடுத்த - மேகநிறமான துணியொடு கட்டப்பெற்ற; செம்பொன் தகட்டிடை தொடுத்த - செம்பொன்னால் ஆகிய தகட்டின் இடையே அழகுறத் தைத்த; முத்தின் நகுகொடி - முத்துக்களால் விளங்கும் கொடிகள்; நெடிய பாயா - நீண்ட பாயாகத் தோன்ற; நவ் எனச் சென்ற - பெரிய பாய்மரக் கப்பல்கள் போலச் சென்றன.
தேரைப் பிரித்துப் படகில் ஏற்றினர் ஆதலின், தேர்த்தண்டும் கொடியும் இங்கே பாயும், பாய்மரமும் போல் தோன்றின. சிறிய மரக்கலங்கள் பெரிய பாய்மரக் கப்பல்கள் போலத் தோன்றின. தற்குறிப்பேற்ற உவமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the strong, bud-tipped poles, bound with fine peacock plumes
- like smoke from burning aloe-wood, serving as masts,
- and the long banners, bright with pearls set in plates of red gold
- stitched to cloth the colour of cloud, serving as sails, the boats went on like great ships.
What the poem says
The dismantled chariots are on board, so their tall flagpoles, topped with bud-shaped finials and tufts of peacock feathers, stand up like masts.
Their long banners, cloud-dark cloth worked with gold plates and pearls, hang like sails. Small river boats loaded this way look like large sailing ships.