கம்பராமாயணம் 2436 · அயோத்தியா 11.59

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆனனம் கமலம் அத்து அன்ன , மின் அன்ன அமிர்தச் செவ்வாய்த்
தேன் நனை குழலார் ஏறும் அம்பிகள் சிந்தும் முத்தம்
மீன் என , விரிந்த கங்கை விண் எனப் பண்ணை முற்றி ,
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாது ஓ !

பொருள் · Meaning in Tamil

விரிந்த கங்கை - அகன்ற கங்காநதி; விண் என - ஆகாயம் ஆக; சிந்து முத்தம் மீன் என - (கங்கையாறு) சிந்துகின்ற முத்துகள் விண்மீன்களாக; கமலத்து அன்ன ஆனனம் - தாமரை மலர் போன்ற முகம்; அமுதச் செவ்வாய் - அமுதமூறும் சிவந்த வாய் ஆகியவற்றை உடைய; மின் அன்ன தேன் நனை குழலார் - தேன் சிந்தும் கூந்தலை உடைய மின்னலை ஒத்த மகளிர்; ஏறும் அம்பிகள் - ஏறிச் செலுத்தும் ஓடங்கள்; வானவர் மகளிர் பண்ணை முற்றி - தேவ மகளிர்கள் நீர் விளையாட்டை முடித்து; ஊரும் மானமே நிகர்த்த - மேலேறிச் செல்லுகின்ற விமானங்களை ஒத்தன.

கங்கை நீர்ப்பரப்புக்கு ஆகாயம், கங்கை சிந்தும் முத்துகளுக்கு நட்சத்திரங்கள், மகளிர்க்குத் தேவமாதர், ஓடங்களுக்கு விமானங்கள் உவமையாயின. பண்ணை - விளையாட்டு. “கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு” (தொல். சொல். உரி. 21) என்பது காண்க. 'மாது', 'ஓ' அசை. அணிந்துள்ள மலர்களின் தேனால் நனைந்த கூந்தல் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The boats boarded by women with lotus faces, lightning-bright,
  2. with nectar-sweet red lips and hair wet with honey —
  3. with the pearls they scattered for stars and the broad Gaṅgā for the sky —
  4. were just like the aerial cars that goddesses ride home when their water-play is done.

What the poem says

The poet builds a picture of heaven on the river. The wide Gaṅgā is the sky, and the pearls scattered on it are the stars.

The women, with lotus faces, red lips and hair wet with the honey of their flowers, are goddesses. The boats carrying them are the flying chariots goddesses ride home after playing in the water.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉaṉam kamalattu aṉṉa, miṉ aṉṉa amutac cev vāy
tēṉ naṉai kuḻalār ēṟum ampikaḷ cintu muttam
mīṉ eṉa, virinta kaṅkai viṇ eṉap paṇṇai muṟṟi,
vāṉavar makaḷir ūrum māṉamē nikartta mātō!