கம்பராமாயணம் 2437 · அயோத்தியா 11.60

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1துளி படத் துழாவு திண் கோல் துடுப்பு இரு காலில் தோன்ற ,
நளிர் புனல் கங்கை யாற்றில் நண்டு எனச் செல்லும் நாவாய் ,
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழைக் கயல் கண் மாதர்
ஒளிர் அடிக் கமலம் தீண்ட , உயிர் படைத்தனவே ஒத்த .

பொருள் · Meaning in Tamil

துளிபட - துளிகள் உண்டாகும்படி; துழாவு - (நீரைத்) துழாவுகின்ற; திண்கோல் - வலிய கோலை உடைய, துடுப்பு - துடுப்புகள்; இரு காலின் தோன்ற - இரண்டு கால்களைப் போலத் தோன்ற; நளிர் புனல் கங்கை ஆற்றில் - குளிர்ந்த நீரை உடைய கங்கா நதியில்; நண்டு எனச் செல்லும் நாவாய் - நண்டு என்று சொல்லும்படி செல்கின்ற மரக்கலம்; களி உடைய மஞ்ஞை அன்ன - களிப்பை உடைய மயிலை ஒத்த; கனங்குழை - பொற்றோடு அணிந்த, கயல்கண் - மீன் போன்ற கண்ணை உடைய; மாதர் - மகளிரது; ஒளிர் அடிக் கமலம் தீண்ட - விளங்குகின்ற அடித் தாமரைகள் படுதலால், உயிர் படைத்தனவே ஒத்த - உயிர் பெற்றனவே போன்றிருந்தன.

மகளிர் பாதம் பட்டதால் நாவாய்கள் உயிர்பெற்றன போன்றன என்று தற்குறிப்பேற்ற உவமையாக்கினார். துடுப்புக் கம்புகள் இருபுறமும் இருத்தல் கால்கள் போலத் தோன்றின. நண்டு ஒதுங்கிச் செல்லும் இயல்பினது ஆதலின் ஆவதை அட ஏற்ப ஒதுங்கிச் சேறலின் நண்டு போலும் நாவாய் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With their strong-shafted paddles stirring up spray, showing like a pair of legs,
  2. the boats that went like crabs on the cool waters of the Gaṅgā
  3. seemed to have come to life when touched by the shining lotus feet
  4. of the carp-eyed women with heavy ear-rings, like joyful peacocks.

What the poem says

With paddles sticking out on both sides like legs, and moving a little sideways against the current, the boats scuttle across the river like crabs.

The poet imagines they only came alive when the women stepped aboard, as if touched into life by their lotus feet. The women are lovely as dancing peacocks, with carp-shaped eyes and heavy gold ear-rings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuḷi paṭat tuḻāvu tiṇ kōl tuṭuppu iru kāliṉ tōṉṟa,
naḷir puṉal kaṅkai āṟṟil naṇṭu eṉac cellum nāvāy,
kaḷiyuṭai maññai aṉṉa kaṉaṅ kuḻaik kayal kaṇ mātar
oḷir aṭik kamalam tīṇṭa, uyir paṭaittaṉavē otta.