கம்பராமாயணம் 2438 · அயோத்தியா 11.61

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மை அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும்
மெய் வினை தவமே ; அன்றி , மேலும் ஒன்று உளதோ ? கீழோர்
செய்வினை நாவாய் ஏறித் தீண்டலர் , மனத்தில் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆகத் தேவரின் முனிவர் போனார் .

பொருள் · Meaning in Tamil

(இவ்வாறு நாவாய் ஏறிப் பலரும் செல்ல) முனிவர் - முனிவர்கள்; கீழோர் செய்வினை நாவாய் - கீழான மனிதச் சாதியினரால் செய்யப்பெற்ற தொழிலமைந்த மரக்கலத்தை; ஏறித் தீண்டலர் - தீண்டி ஏறாதவர்களாய்; மனத்தில் செல்லும் மொய்விசும்பு ஓடமாக - மனத்தால் நினைத்த மாத்திரையில் செல்லும் ஆகாயமே தாம் ஏறிச்செல்லும் ஓடமாகக் கருதி; தேவரின் - தேவர்களைப் போல; போனார் - வான் வழியே சென்றார்கள்; மை அறு விசும்பில் - குற்றமற்ற விண்ணுலகிலும்; மண்ணில் - மண்ணுலகிலும்; மற்றும் ஓர் உலகில் - வேறோர் உலகிலும்; மெய்வினை - உண்மையான தொழில்; தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ - தவமே அல்லாமல் அதற்கு மேற்பட்டதாக வேறு ஒரு தொழில் உள்ளதா? இல்லை என்றபடி.

“வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்” (குறள் 265) என்ற வள்ளுவர் கூற்றும் காண்க! 'முனிவர்கள் வான்வழியே சென்றார்கள்' என்ற சிறப்புப் பொருளைத் 'தவத்திற் சிறந்தது எவ்வுலகத்திலும் இல்லை' என்ற உலகறிந்த பொதுப் பொருளால் முடித்தமையின் இது வேற்றுப் பொருள் வைப்பணி. “முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப், பின்னொடு பொருளை உலகறி பெற்றி, ஏற்றி வைத்து உரைப்பது வேற்றுப் பொருள் வைப்பே” (தண்டி. 47) என்பவாதலின். மற்றும் ஓர் உலகு - கீழ் உலகுமாம். “தவம் செய்வார் தம்கருமம் செய்வார்” (குறள் 266) என்பது கருதி 'மெய் வினை தவமே' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the stainless heavens, on earth, and in any other world besides,
  2. the one true work is penance; is there anything higher? Not touching
  3. the boats made by the work of humbler men, but taking the crowded sky,
  4. which goes wherever the mind goes, for their ferry, the sages went across like gods.

What the poem says

The sages with the army do not take the boats. Through the power of their austerities they cross the Gaṅgā through the air, like gods, as if the sky that carries you wherever the mind wishes were their ferry.

The poet adds a general truth: in heaven, on earth or in any other world, nothing is greater than ascetic practice. Stating a particular case and then capping it with a universal maxim is a recognised figure of speech, and the Tirukkuṟaḷ likewise says that penance brings whatever one desires.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mai aṟu vicumpil maṇṇil maṟṟum ōr ulakil muṟṟum
mey viṉai tavamē; aṉṟi, mēlum oṉṟu uḷatō? kīḻōr
cey viṉai nāvāy ēṟit tīṇṭalar, maṉattiṉ cellum
moy vicumpu ōṭam ākat tēvariṉ muṉivar pōṉār.