கம்பராமாயணம் 2439 · அயோத்தியா 11.62

Section அயோத்தியா காண்டம் / 11. குகப்படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '

பொருள் · Meaning in Tamil

“அறுபதினாயிரம் அக்குரோணி” என்று இறுதிசெய் சேனையும் - அறுபதாயிரம் அகெளஹிணிகள் என்று (கணக்கு முடிவு செய்யப்பட்ட சேனைகளும்; எல்லைதீர் நகர் - அளவுகடந்த அயோத்தி நகரத்து; மறு அறு மாந்தரும் - குற்றம் அற்ற மக்களும்; மகளிர் வெள்ளமும் - பெண்கள் கூட்டமும்; செறி திரைக் கங்கை - நெருங்கிய அலைவீசுகின்ற கங்கை; பின் கிடக்கச் சென்ற - கங்கையாறு பின்னிடும்படி போயின.

“அக்குரோணிகள் மூன்று பத்து ஆயிரத்து இரட்டி” என்று முன்பும் (2307) கூறினார் ஆதலின், இங்கே 'இறுதிசெய் சேனை' என்று கணக்கு வரையறை செய்யப்பட்ட சேனை எனக் கூறினார். அக்குரோணி என்னும் கணக்கு அப்பாடற் பகுதியுரையால் (2307) அறிக. பெரு நகரங்கள் மேலும் மேலும் விரிந்து வளர்ச்சி பெறுவன ஆதலின், 'எல்லை தீர் நகர்' என்றாராம். மகளிர் வெள்ளம் கூறுதலின் மாந்தர் ஆடவரேயாம். 'ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The army reckoned in full as 'sixty thousand akkurōṇis',
  2. the spotless men of the boundless city,
  3. and the flood of women all went on,
  4. leaving the Gaṅgā of crowded waves behind them.

What the poem says

The crossing is complete. The whole army, counted earlier as sixty thousand akkurōṇis, has crossed, together with the men of the ever-growing city of Ayōttī and its flood of women. The Gaṅgā now lies behind them.

The poem returns to a new metre here as the scene shifts to Paratan himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṟupatiṉāyiram akkurōṇi ' eṉṟu
iṟuti cey cēṉaiyum, ellai tīr nakar
maṟu aṟu māntarum, makaḷir veḷḷamum,
ceṟi tiraik kaṅkai piṉ kiṭakkac ceṉṟavē.