கம்பராமாயணம் 2454 · அயோத்தியா 12.5

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உரைத்த வாசகம் கேட்டலும் , உள் எழுந்து
இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம்
குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்தவால் ,
அரைத்த சாந்துகொடு அப்பியது என்னவே .

பொருள் · Meaning in Tamil

உரைத்த - (இவ்வாறு பரதன்) கூறிய; வாசகம் கேட்டலும் - மனந்திறந்த சொற்களைக் கேட்ட அளவில்; உள் எழுந்து இரைத்த காதல் - (இராமனிடத்தில் உள்ளேயிருந்து புறப்பட்டுப் பொங்கிய அன்பினை உடைய; இருந்தவத்தோர்க்கு எலாம் - பெரிய தவமுனிவர்களுக்கு எல்லாம்; அரைத்த சாந்து கொடு அப்பியது என்ன - நன்றாக அரைத்த சந்தனத்தைக் கொண்டுவந்து பூசியதுபோல; குரைத்த மேனியொடு உள்ளம் - பூரித்த உடம்போடு மனமும்; குளிர்ந்தது - குளிர்ச்சி அடைந்தது.

தவத்தோர் - பரத்துவாசனோடு உடன் இருந்த முனிவரரையும் கூட்டி, முன்பே இராமன்பால் கழிபெருங்காதலுடையராய் அவன் வனம் புகுந்ததற்கு இரங்கிய உள்ளம் உடையவராதலின் பரதன் சொற்கள் அவர்களை மேலும் குளிர்வித்தன. மகிழ்ச்சியால் உடம்பு பூரித்தல் வழக்கு. ஆல் - ஏ, ஈற்றசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as they heard the words he spoke, all the great ascetics,
  2. whose love rose up and surged within them,
  3. felt body and mind grow cool, their frames swelling with joy,
  4. as if they had been smeared with finely ground sandal paste.

What the poem says

The sages of the hermitage love Irāmaṉ dearly and were grieved when he went into exile. Paratan's words delight them.

Their bodies swell with happiness and their hearts cool, as if they had been rubbed with soothing sandal paste.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uraitta vācakam kēṭṭalum, uḷ eḻuntu
iraitta kātal irun tavattōrkku elām
kuraitta mēṉiyoṭu uḷḷam kuḷirntatāl,
araitta cāntu koṭu appiyatu eṉṉavē.