கம்பராமாயணம் 2453 · அயோத்தியா 12.4

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

மறையின் கேள்வற்கு - வேத நாயகனான இராமனுக்கு; மன் இளந்தோன்றல் - பொருந்திய தம்பியான பரதன்; “பின் முறையின் நீங்கி - இராமனுக்குத் தம்பி என்கின்ற முறையிலிருந்து விலகி; முதுநிலம் கொள்கிலேன் - தொன்றுதொட்டு வந்த கோசல அரசை ஏற்றுக்கொள்ளேன்; இறைவன் கொள்கிலன் ஆம் எனின் - இராமன் அரசை ஏற்றுக்கொள்ளானாயின்; யாண்டு எலாம் - அவன் வனத்தில் வசிக்கும் பதினான்கு யாண்டுகளும்; கானத்து ஒருங்கு உடனே உறைவென்” - காட்டில் அவனோடு சேர்ந்து அவனுடனேயே தங்குவேன்; என்றான் - என்று கூறினான்.

மறையின் கேள்வன் - வேத நாயகன். கேள்வன் என்றால் நாயகன் எனப் பொருளாம் ஆதலின், வேத நாயகன் என்றாம். “வேத நாயகனே உன்னைக் கருணையால் வேண்டி விட்டான்” (7424,) என்பதும் காண்க. இனி, மறையின் கேள்வன் என்பது பரத்துவாச முனிவனைக் குறித்துக் கூறியதாகக் கோடலும் ஆம். அப்பொழுது 'மன்' என்பதற்கு இராமன் என உரைக்க. இராமனோடு வனத்துறைதல், இராமனை இணைபிரியாது சேர்ந்துறைதல் இரண்டும் அடங்க ஒருங்கு, உடன் என்று இருசொற்கள் பெற்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then the king's young brother said to the lord of the Veda:
  2. 'I will not depart from the order of succession and take the ancient land;
  3. if my lord will not take it, then for all the years
  4. I will live in the forest, together with him, at his side.'

What the poem says

Paratan states his position plainly. He will not break the order of succession by taking the ancient kingdom of Kōcalam. If Irāmaṉ refuses to take it, Paratan will stay with him in the forest for all fourteen years of exile.

"The lord of the Veda" may refer to Irāmaṉ, to whom Paratan is younger brother, or to the sage Parattuvāca, to whom he is speaking.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟaiyiṉ kēḷvaṟku maṉ iḷan tōṉṟal, piṉ,
'muṟaiyiṉ nīṅki mutu nilam koḷkilēṉ;
iṟaivaṉ koḷkilaṉ āmeṉiṉ, yāṇṭu elām
uṟaiveṉ kāṉattu oruṅku uṭaṉē ' eṉṟāṉ.