கம்பராமாயணம் 2452 · அயோத்தியா 12.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அது கேட்ட பரதன்) சினம் கொடுந் திறல் சீற்ற வெந்தீயினான் - கோபமாகிய மிக்க வலிபடைத்த எழுச்சியுடைய கொடிய நெருப்பை உடையவனாக; மனக்கடுப்பினன் - மனம் கொதித்து; மா தவத்து ஓங்கலை - பெரிய தவமலையாகிய பரத்துவாசனை (நோக்கி); “உரவோய்! - பேரறிவை உடையவனே; நீ -; 'எனக்கு அடுத்தது இயம்பிலை' - எனக்குப் பொருந்திய சொற்களைச் சொல்லவில்லை; என்றான்; (மேலும் நீ இவ்வாறு கூறியது); 'உனக்கு அடுப்பது அன்றால்' - உன் நிலைமைக்குப் பொருத்தமானது அன்று; என்றான்.
எந்தச் சொல்லைக் கேட்டுத் துன்பமும் துடிப்பும் உடையவனாய்க் காடு நோக்கி வந்தானோ அதனையே முனிவன் கூறக் கேட்டலின் பரதனுக்குச் சினத்தீ சீறி எழுந்தது. 'நின்பால் இயைந்து அடுத்த பேர் அரசு' என்றான் பரத்துவாசன். தவவலிமை உடையவனாகவும், அறிவோனாகவும் இருக்கின்றவன் நியாய அநியாயங்களை உணர்ந்து கூறாமல் மூத்தவன் இருக்க இளையவன் அரசு புரிதலைக் கூறுதலின் 'உனக்கு அடுப்பது அன்றால்' என்று கூறினான். சீற்றத்தால் இடைவிட்டுத் துடித்துப் பேசுதலுக்கேற்ப 'என்றான்' என்று இருமுறை இக் கவியிற் கூறியது ஒரு நயம். உரம் - அறிவு. “உரமொருவற்குள்ள வெறுக்கை” (குறள். 600).
ஆங்கிலம் · English translationAI
Translation
- He, with the hot fire of fierce and mighty anger,
- his mind burning, said to that mountain of great penance,
- 'You have not spoken what is fitting for me';
- and said, 'Nor is it fitting for you, O wise one.'
What the poem says
The question makes Paratan blaze with anger. These are the very words that drove him into the forest in shame: that the kingdom is his.
He tells the great sage that this is no fit thing to say to him, and then, more sharply, that it is unworthy of a man of the sage's wisdom to suggest a younger brother should rule while the elder lives. The double "he said" catches his anger, as he breaks off and starts again.