கம்பராமாயணம் 2451 · அயோத்தியா 12.2

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

(பின்பு முனிவன்) “ஐய! - பரதனே!; நின்பால் இயைந்து அடுத்த பேர்அரசு - உன்னிடம் வந்து தானே சேர்ந்த கோசல ராச்சியத்தை; நீ எடுத்த மாமுடி சூடி - நீ உயர்ந்த திருமுடியைச் சூடிக்கொண்டு; ஆண்டிலை - ஆளாமல்; மூசு தூசு உடுத்து - உடம்பைப் போர்த்து மரவுரியை உடுத்துக்கொண்டு, முடித்த - திரித்துக் கட்டின; வார் சடைக்கற்றையை - நீண்ட சடைத்தொகுதியை உடையவனாய்; நண்ணுதற்கு - வனத்தின்கண் வந்து பொருந்துதற்கு; உற்றுளது யாது?” - நேர்ந்த காரணம் என்ன?; என்றான் - என்று கேட்டான்.

எடுத்த - உயர்த்திய, உனக்கென்று உன் தாயால் எடுத்து வைக்கப்பெற்ற என்றும் ஆம். மரவுரி உடம்பில் ஒட்டிப் பொருந்தாது ஆதலின் போர்த்தாற்போல் உள்ளது என்னும் பொருளில் 'மூசு' என்று உரைத்தார். உற்றுளது என்பது இடைவந்து நேர்ந்தது என்னும் பொருளில் வந்துள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Instead of wearing the great raised crown and ruling
  2. the vast kingdom that came to you and is yours, sir,
  3. what has happened that you come here, your hair in long tied-up matted locks,
  4. and wrapped in a covering garment of bark?' he said.

What the poem says

The sage asks Paratan, perhaps to test him, why he is not wearing the crown and ruling the kingdom that came to him by right. Why has he come to the forest with matted hair, wrapped in stiff bark-cloth?

The "raised crown" may also mean the crown his mother set aside for him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṭutta mā muṭi cūṭi, niṉpāl iyaintu
aṭutta pēr aracu āṇṭilai, aiya! nī,
muṭitta vār caṭaik kaṟṟaiyai, mūcu tūcu
uṭuttu naṇṇutaṟku uṟṟuḷatu yātu? ' eṉṟāṉ.